ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கி மீட்பு !! PSD களத்தில்

· · 675 Views

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி மீட்கப்பட்ட மற்றுமொரு சம்பவமொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

 

 

இந்த சம்பவம் ஜனாதிபதியின் சொந்த இடமான பொலனறுவையில் நிகழ்ந்திருக்கிறது.

 

 

 

இதற்கு முன்னர் பதுளை மற்றும் அம்பாந்தோட்டை – அங்குனுகொல பெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

 

 

 

இந்த நிலையில் பொலனறுவை – எத்துமல்பிட்டிய லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலயத்தின் இரட்டை மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 

 

 

இதில் விசேட அதிதியான கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டிடத்தை திறந்து வைத்தார்.

 

 

 

இதனிடையே இந்தப் பாடசாலைக்கு முன்பாக இருந்த வீட்டு வளாகத்திலிருந்து துப்பாக்கியொன்றை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

 

 

 

குறித்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கி குரங்குகள் விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 

 

 

எனினும் இதுதொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.