ஜனாதிபதியை கடுமையாக சாடிய அமைச்சர் சுஜீவ..!! நல்லாட்சி தேன் நிலவு ஆபத்தில்

· · 483 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியை ஒடுக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணை முறி விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (21) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

 

 

 

”ராஜபக்சக்களையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒடுக்கி பின்னர் 2020ஆம் ஆண்டு பலத்த அதிகாரத்துடன் மீண்டும் ஜனாதிபதியாக நியமனம் பெறுவீர்கள் என ஒரு நிறுவனம் அவருக்கு உறுதிவழங்கியுள்ளது. பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இதனைச் செய்து என்ன செய்தனர்? இந்த பதவிக் காலத்தை நீடித்து நீடித்து எம்மீது சேறுபூச சந்தர்ப்பம் வழங்குகின்றனர்.

 

 

 

 

 

 

மிக் கொடுக்கல் வாங்கலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று இருக்கிறதா? ஸ்பெக்டர் ஊழலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு இருக்கிறதா? 7 – 8 பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் இவை. கப்பல் கொடுக்கல், வாங்கலுக்கு எங்கே ஜனாதிபதி ஆணைக்குழு? விளம்பர நிறுவங்களுக்கு எங்கே ஜனாதிபதி ஆணைக்குழு? நிலைமை இதுதான். இது பிரதமரின் கருத்து அல்ல.

 

 

 

 

 

 

இது எனது தனிப்பட்ட கருத்து. பாரிய அர்ப்பணிப்புடன் நாம் இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். அலோசியசை பாதுகாக்க C.I.Dஇற்கு அழைத்ததாக எங்காவது பதிவாகியுள்ளதா? அலோசியசை பாதுகாக்க மத்திய வங்கி அதிகாரியொருவருக்கு அழைத்ததாக பதிவு இருக்கிறதா? அலோசியசை பாதுகாக்க யாருக்காவது பேசியதாக பதிவு இருக்கிறதா? த

 

 

 

 

 

கவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவருடன் நான் உரையாடினேன். குறித்த நபருடன் பேசக்கூடாது என்று கோப் குழு யாப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதா? அப்படியொரு சட்டம் இருக்கிறதா? எனக்கு டீல் செய்ய வேண்டுமாயின், 30 – 40 அழைப்புக்களை எடுக்க வேண்டுமா? இரண்டு – மூன்று அழைப்புக்களில் அதனை முடிக்க இருந்தது” என்று ஆவேசமாக பேசி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published.