ஜனாதிபதியின் விஷேட செய்தியுடன் மகிந்தவை சந்தித்த சுசில் பிரேமா ஜெயந்த் ,ஜோன் செனவிரத்ன !! மகிந்தவின் செல்வாக்கு குறித்து அஞ்சும் மைத்திரி

· · 651 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட செய்தியொன்றுடன் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனரவிரத்ன ஆகியோர் (22) இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

 

 

எவ்வாறான நெருக்கடிகள் வந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியும் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

‘தான் சரமொன்றைக் கட்டிக்கொண்டு (வெட்கமின்றி) மகிந்த ராஜபக்சவுடன் எவ்வாறு பேச்சு நடத்துவது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக கடந்த ஞாயிறு வெளியாகிய சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை மொழிபெயர்ப்பு செய்த சிறி ரணசிங்க, நேற்று முன்தினம் வெளியான லங்காதீப பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.

 

 

 

இதனைப் பார்த்த ஜனாதிபதி, சிறி ரணசிங்கவை அழைத்து, தான் எச்சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

மாற்றமடைந்துவரும் அரசியல் சூழல் நிலைகளை அவதானிக்கும் போது, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி குறித்த ஜனாதிபதியின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

 

 

 

இந்த நிலையில், உள்ளுராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) இடைக்கால தடை விதித்தது. இதனால் உள்ளுராட்சித் தேர்தல் தள்ளிச் செல்வதைத் தவிர்க்க முடியாது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் குறித்து வரும் 27ஆம் திகதி அறிவிப்பதாக தேர்தல் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடை டிசம்பர் 04ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பதால் தற்போதைக்கு தேர்தல் ஆணையாளரினால் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது.

 

 

 

இதனால் வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதி தள்ளிப் போவதுடன் தேர்தல் தள்ளிப் போவதைத் தவிர்க்க முடியாது என கஃபே அமைப்பு உறுதியாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.