ஜனாதிபதியின் பேஸ் புக் அட்மினாக “தஹம் சிறிசேனா “நியமிப்பு – முன்னைய அட்மின்கள் ஒழுங்காக செயற்படவில்லையாம்

· · 271 Views

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

150926133037_daham_sirisena__un_512x288_b_nocredit-2

ஜனாதிபதி ஊடக பிரிவின் கீழ் உள்ள சமூக வலைத்தள பிரிவே இவ்வாறு தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி அதன் ஊழியர்களை கடுமையாக சாடியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டிள்ளது.

அங்கு சேவை செய்யும் பலர் சிங்கள பிரதான ஊடகத்தில் சேவை செய்தவர்கள் என கூறப்படுகின்றது.

அந்த ஊடகத்தின் தலைவருக்கு நெருக்கமானவர்கள் ஜனாதிபதியின் ஊடகபிரிவிற்கு இணைக்கப்பட்டுள்ளதாக, வேறு ஊடகத்தின் உரிமையாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி ஊடக பிரிவை சேர்ந்தவர்களை ஜனாதிபதி கடுமையாக திட்டியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.