ஜனாதிபதிக்கு சுகயீனம் இல்லை..!! நலமாக இருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

· · 506 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

maithri-security

ஜனாதிபதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதனால், அவர் மேற்கொள்ளவிருந்த யாழ். விஜயமும் ரத்து செய்யப்பட்டதாக அவ்விணையத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

உண்மையில் ஜனாதிபதியின் வேலைப்பளுக்கள் அதிகரித்தமையே யாழ். விஜயத்தை ரத்து செய்வதற்கான காரணம் எனவும் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் நடைபெறவிருந்த பாதுகாப்பு பிரதானிகளின் சந்திப்பு, கொழும்பில் இன்று மாலை இடம்பெற்றதாகவும் செயலக வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.