சோத்துப் பிட்டிவாடி : மஹ்ரிப் தொழுகைக்காகச் சென்ற இன்சாத் லாஹிர் (வயது 10) ரை மோதி விட்டு நிறுத்தாமல் சென்ற பட்டா லொறி..!! காலம் சென்ற சிறுவனின் குடும்பம் கவலையில்

· · 3222 Views

முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்

கல்பிட்டி – பாலாவி வீதியின் சோத்துப்பிட்டிவாடி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 6.30க்கு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட கல்பிட்டிப் பொலிஸார், சிறுவனை மோதித்தள்ளிய வாகனம், நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

lafir-1479105959-accident

கற்பிட்டி கண்டல்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இன்சாத் லாஹிர் (வயது 10) எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் சோத்துப்பிட்டிவாடி பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு மஹ்ரிப் தொழுகைக்காகச் சென்ற போது, எதிரே வந்த பட்டா ரக லொறியொன்று மோதிவிட்டுச் சென்றுள்ளதாகக் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாறு மாணவனை மோதிவிட்டுச் சென்றுள்ள பட்டா ரக லொறியின் சாரதியைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.