சென்னை ரஷ்யத் தூதரகம் முற்றுகை !! கைக் குழந்தைகளுடன் முஸ்லிம் பெண்கள் போராட்டம்

· · 354 Views

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போருக்கு ரஸ்யா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் ரஸ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .   சிரிய அரசாங்கம் கிளர்ச்சியானர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலுக்கு ரஸ்யா போர் உதவிகளை செய்து வருகிறது. கடந்த 1 வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் போரில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அங்கு 5 மணி நேரம் போர் நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்ட போதிலும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

இந்தநிலையில் சென்னையில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் வந்து பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கலவரத்தில் சிறுபிள்ளைகளை கொன்று குவிக்கும் அரசின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.