“சிறந்தி ராஜபக்ச வெலிக்கடை ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்பதால், சரத்துக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு கொடுப்பதை தடுக்க மகிந்த பெரும் பிரயத்தனம்

· · 555 Views

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதைத் தடுக்க மகிந்த ராஜபக்ச தரப்பினர் கடும் பிரயத்தனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஊழல் மோசடியாளர்களும் கலவரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

இதனால் சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதைத் தடுக்க பல முனைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுளு;ளன.

 

 

 

 

தற்போது மகிந்த ராஜபக்ச தரப்பினர் கடுமையாக கலவரமடைந்துள்ளனர். சரத் பொன்சேக்கா யார் என்பதை அறிந்துகொண்டுள்ள ராஜபக்ச தரப்பினர், அவருடன் விளையாட முடியாது என்பதையும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.

 

 

 

 

ராஜபக்ச தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இழுபறியில் இருந்த நிலையில், அதன் விளைவுகளை ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த தேர்தலில் சந்தித்திருந்தன.

 

 

பசில், நாமல் உள்ளிட்ட ராஜபக்ச தரப்பினர் கடந்த காலங்களில் விளக்கமறிலியல் இருந்தபோதிலும் பிணையில் விடுதலையான போது ” எங்கே திருடர்களைப் பிடித்தார்களா?” என்ற கேள்வியுடனேயே வெளியில் வந்தனர்.

 

 

இந்த நிலையில், சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படும் செய்தி வெளிவந்ததால், ஷிரந்தி ராஜபக்ச பெரிதும் குழப்பமடைந்ததுடன், ஏதாவது செய்து இதனைத் தடுக்குமாறு மகிந்த ராஜபக்சவிற்கு அவர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

ஷிரந்தி ராஜபக்சவின் பெயர் சிரிலிய கொடுக்கல் வாங்கல் மோசடியிலும், தாஜூன் கொலை வழக்கிலும் தொடர்புபட்டிருப்பதால், சட்டம் ஒழுங்கு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஷிரந்தி தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

 

 

ராஜபக்ச குடும்பத்திற்கு மேலதிகமாக ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் கூட தற்போது சரத் பொன்சேக்காவின் நியமனத்தினால் பெரும் கலவரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

இதனால் சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்குவதைத் எந்த வகையிலாவது தடுப்பதற்கு ராஜபக்ச தரப்பினர் கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.