சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்தது..!!ரஷ்யா அறிவித்தது

· · 555 Views

சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 டொம்ஹோக் குறூஸ் ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Image result for syrian air defence reply west missile attack

 

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

 

மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலானது, சிரியாவின் ஆராய்ச்சி நிலையங்களை மாத்திரம் இலக்குவைத்து நடத்தப்பட்டது அல்ல.

 

 

விமான தளங்கள் உள்ளிட்ட சிரியாவின் இராணுவ சொத்துக்களை அழித்து ஒழிக்கும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

Image result for syrian air defence reply west missile attack

 

 

ஆனால், மேற்குல நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களை, சிரியா பழைமையான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி தகர்த்திருந்தது எனத் தெரிவித்தார்.

 

 

சிரியாவின் டூமா நகரில் கடந்த 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தலைமையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் ஆதரவுடன் இந்த வார இறுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

கடந்த ஒரு சகாப்தமாக வளை குடாவில் ஈராக், லிபியா போன்ற முஸ்லிம் நாடுகளின் மீது ஏவப்பட்ட அதி நவீன டொமொஹோக் ஏவுகணைகள் வரலாற்றில் முதல் தடவையாக அதன் செயலிழப்பை சந்தித்தாக  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.