சிரியாவின் அக்கிரமங்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை!! பிரிட்டிஷ் பிரதமர்

· · 442 Views

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அந்நாட்டின் கொடுமைகளுக்கு எதிராக  ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

 

 

எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

 

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

 

 

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிரியா

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் ‘டோமாஹாக்’ வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

 

 

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் சிரியாவின் வான் பாதுகாப்பபு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

 

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.