சித்தி சலீமா Firing : பொய் செய்திகளை வெளியிடும் புத்தளம் டுடேக்கு ஊடகம் என்ற பெயர் தேவையா..? சித்தி சலீமா கடுப்பு

· · 1065 Views

இப்படிப்பட்ட செய்திகளைத்தானா(அப்பட்டமான பொய்யான) இவ்வளவு காலமும் பிரசுரித்து வந்தீர் சகோதரரே?

 

 

 

 

வேறுதகவல்களை விடுவோம். என்னைப்பற்றி இப்படி ஒரு அபாண்டமான செய்தி என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை மன்னித்திருக்கலாம். யாரோ சொல்கின்ற பிழையான தகவல்களைப் பிரசுரிப்பதென்றால் அதற்கு பெயர் செய்தியல்ல ஊர் பலாய்.

 

 

இதற்கு ஒரு ஊடகம் என்ற பெயர் தேவைதானா?.

 

-siththi saleemaa 

 

ஏன்  கோவப்படுகிறார்  வேட்பாளர் சலீமா..?

 

N.F.G.G. யின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு சீட் : T.S. அமீன் மீண்டும் உறுப்பினராவார்

முதல் தடவையாக புத்தளம்   தேர்தல் ஒன்றில் களமிறங்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இறங்கிய வேகத்திலேயே  புத்தளம் நகர சபையில் ஒரு  போனஸ்  ஆசனத்தை வென்று புத்தளம் அரசியல் வட்டாரங்களின் மூக்கில் விரலை வைக்க வைத்தது.

 

 

 

 

புத்தளத்தின் அரசியல் கலாச்சாரங்களுக்கு அப்பால்  பெரும்பாலும் கல்வியாளர்களைக் கொண்ட ஒரு அணியை நியமித்து  எந்த  தனி நபர் தாக்குதல்களையும் மேற்கொள்ளாமல்  களத்தில் தனியாக நின்று அந்த அணி பெற்ற ஒரு ஆசனத்தில் அமரப் போகின்றவர் யார் என புத்தளம் அரசியல் வட்டாங்களில் ஆர்வத்தை ஏற்படுத்திய  விடயம் தற்போது  தெரிய வந்துள்ளது.

 

 

 

 

 

கட்சியின் தேர்தலுக்கு முன்னரான  ஏற்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளின் படி அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரும் முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினருமான எம்.டி.எம்.அமீன் அதன் போனஸ் ஆசனதிற்க்கான உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

 

 

 

கட்சியின் வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தில்  அமீனுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளதால் உறுப்பினராக அவர் தெரிவாகியுள்ளார்.

 

 

பட்டதாரியும்  சமூக  சேவகருமான ஜனாப்.அமீன் , ஏற்கனவே  கடந்த நகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதற்கிடையில்  நகர சபைக்கு  யாரை  தெரிவு செய்வது  என்ற விடயத்தில் புத்தளம் N.F.G.G.  அணியினர்  மூன்றாக பிரிந்து மல்லுக்கு நிக்கின்றனர் என்ற செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

 

கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்  Dr. ரிபாத்  M.D  தனது  சகோதரர்  பொறியியலாளர்  ரியாசுக்கு போனஸ் ஆசனம் வழங்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரியுள்ள அதே நேரம் N.F.G.G. அமீன் பிரிவினர் தமக்கே  ஆசனம் உரித்தானது என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

 

 

இதற்கிடையில்  4 ம் வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெருங் கட்சிகளின்  வேட்பாளர்களுடன் மோதிய,, கட்சியில் எண்ணிக்கை அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்ற சித்தி சலீமா, இந்த ஆசனம்  தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரி இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

 

 

என்றாலும்  கூட  அணியின்  வாக்குகளில்  அதிக  விகிதாசாரத்தைப் பெற்றுள்ள எம்.டி.எம். அமீன்  பெரும்பாலும் உறுப்பினராக பதவி ஏற்பார் என்பதை கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.