சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் !! நடமாடும் சதோஷ சேவையை ஆரம்பிக்கிறார் அமைச்சர் றிஷாத்

· · 469 Views

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வாகனங்களின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

 

இவை அனைத்தும் நாடு முழுவதும் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

நாடெங்கிலும் 400 சதொச கிளைகள் காணப்படுகின்றன இதில் மக்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும் அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் வழங்க மத்திய நிலையங்கள் அமைக்கப்படும்.

 

 

அவை சன நெரிசல் நிறைந்த பிரதேசங்களிலும், புகையிரத நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.