“சிகரட் நிறுவன ஏஜெண்டான உங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்க முடியாது..!! தீர்ப்பு கூறி டிரஸ்டியை வீட்டுக்கு அனுப்பிய வக்பு சபை

· · 636 Views
முஸ்லீம் கலாச்சார திணைக்களத்தின் ஒவ்வொறு மாதத்தின் சனிக்கிழமைகளில், வக்பு சபையினால் இஸ்லாமிய மத, பள்ளிவாசல்கள் நிர்வாக் குழு தலைவா் என பல நிர்வாக வழக்கு விசாரனைகள் அங்கு நடைபெறும்.
அண்மையில் செய்தி சேகரிப்பதற்காக நான் அங்கு ஒரு முறை சென்ற போது அங்கு ஒரு வழக்கு விசாரனை நடைபெற்றது.
ஒரு ஊரின் பள்ளிவாசல் தலைவரை நீக்கும்படி, ஒரு சாராா் முறைப்பாடு செய்திருந்தனா்.
அதனை வாதிடுவதற்காக இரண்டு சாராா்கள் சாா்பிலும் சட்டத்தரணிகளும் அங்கு இருந்தனா்.
அவா்கள் முன்வைத்த முறைப்பாடு என்னவென்றால்  அப் பள்ளிவாசல் தலைவரின் பெயரில் அந்த ஊரின் நகரில் டுபேக்கோ (சிக்கரட்) ஏஜென்சி இவா் பெயரில் அந்த ஏஜென்சி லைசன் உள்ளது என வாதிட்டனா்.
நீதிபதி, புகைத்தல் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் ஒரு வியாபாரியாக நீங்கள் உள்ளீா்கள் (இது ஹலால் முறையான வியாபாரம் இல்லை) எனக கூறிப் பள்ளிவாசல் தலைவராக இருக்க முடியாது என தீா்ப்பு வழங்கினாா்.
(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published.