சாது..சாது : முஹம்மது சமீர் (10 வயது) பௌத்த மதத்தை தழுவி துறவியானார் – அடப் போங்கப்பா நீங்களும் உங்கள் இயக்கங்கள் கெட்ட கேடும்

· · 1100 Views

Moulavi Fauz – Kattankudi


ராஜ கிரிய , ஒபே சேகர புர அரணோதய மாவத்தையைச் சேர்ந்த முஹம்மத் சமீர், சுஹைர் என்ற 10 வயது சிறுவன் கடந்த பௌர்னமி தினம் அரனாயக்க மோரா கம்மன சிறி மயுராபத ரஜ மகா விகாரையில் வைத்து பௌத்த பிக்குவாகி மதம் மாறியுள்ளார்.

 

 

 

இந்த சிறவனின் தந்தை முஹம்மத் சுஹைர் நிஸாம்தீன், இவர் சித்ரா சீமனி ஒலிவர் என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.

 

 

 

 

ஒருவர் கணவனின் சகோதரியின் – வீட்டில் இஸ்லாத்தில் வாழ்கின்றார்.

 

 

 

 

 

இளைய மகனுடன் வாடகை வீடு வாழ்க்கைச் செலவு கஷ்டம். பாடசாலை செல்ல பண வசதியில்லை. முஸ்லிம்களும் கவனிக்கவில்லை ஆகையால் நாவலப் பகுதியிலுள்ள
விகாரையில் படிப்பதற்கு சேர்த்தார்கள்.

 

 

 

 

இடையில் தொடராது விலகி விட்டார். மீண்டும் அவரின் தாய் கொழும்பிலுள்ள ஜம்புரேவெவ சந்திரா ரத்ன தேரரை சந்தித்துக் கதைத்தார்.

 

 

 

 

உடனே பிக்கு சொன்னார் உங்கள் பிள்ளையை மதம்மாற்றி பிக்குவாக்க விரும்பினால் முழு உதவியும் செய்வதாகச் சொன்னார்.

 

 

 

 

அதன் நிமிர்ததம் அப்பெண் கணவனிடம் கேட்டு மகனை மதம் மாற்ற விருப்பப்பட்டார். இதன் படி பௌத்த பக்தர்கள் கூடய இடத்தில் வைத்து மதம்மாற்றி பிக்குவாக மாற்றினார்கள்.

 

 

 

 

முஸ்லிம் சமுதாயமே சிந்தியுங்கள், அடிக்கடி உம்றாவுக்குப் போபவர்களே சிந்தியுங்கள்!

 

 

 

ஆடம்பரத் திரு மணம் செய்பவர்களே சிந்தியுங்கள்.

 

 

 

பள்ளிவாசல் கட்டுவதற்கு மாத்திரம் பணத்தை கொடுப்பவர்களே சிந்தியுங்கள்.

 

 

 

அடுத்ததடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பவர்களே சிந்தியுங்கள்

 

 

 

தேர்தல் காலங்களில் பல கோடிகளைக் கொட்டி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே சிந்தியுங்கள்

 

 

 

 

நாம் எல்லோரும் நாளை மஹ்சரில் அல்லாஹ்விடம் பதில் சொல்லலியோ ஆகவேண்டும்

(நேற்றைய லங்கா தீப தகவலிலிருந்து..)

Leave a Reply

Your email address will not be published.