சாதனைப் பெண் சித்தி சலீமா : புத்தளத்து பெண்களுக்காக தேர்தலில் களமிறங்கியுள்ளார்

· · 762 Views

“நான் 10 வயது சிறுமியாக இருந்த போதே வீடு,வீடாக வோட்டு கேட்டு போய் இருக்கிறேன்”.

 

 

 

4ம் வட்டாரத்தில் போட்டியிடும் சித்திசலீமா ராத்தாவின் அனுபவம் இன்று பேசியது. கணவரை இழந்து கைபெண்ஜாதியாய் மூலைக்குள் முடங்கிடாதவர்..

 

 

 

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பர் அவ்வாறு பெற்ற அனுபவங்கள் இன்று இந்த மண்ணுக்காய், பெண்குளத்திற்காய் சமூக சேவகியாக தொண்டாற்ற துணிவைக் கொடுத்தது.

 

 

 

சிறுவர், பெண் உரிமையோடு அபாயாவிற்கான விமர்சனங்கள் வந்தபோது வெளிப்படையாகவே தன் குரலை உயர்தியவர்.

 

 

 

நேர்மை என்றும், ஜனநாயகம் என்றும், பல்லின சமத்துவம் என்றும் ,மனித உரிமை என்றும் குரல் கொடுத்த இலட்சிய வாதி.

 

 

 

கணவனை இழந்த நிலையில் கண்ணீர் வடித்திருந்தாலும் தன் 9 குழந்தை செல்வங்களை சிறப்பாக வளர்த்த தாய் சித்தி சலீமா…
ஈன்ற பெண்குழந்தைகளையும் ஒழுக்கமாய் வளர்த்து வாழ்க்கைத் துணையும் தேடிக்கொடுத்த அன்னை.

 

 

 

சோர்ந்து போகும் பெண் இனத்திற்குள் வாழ்க்கையில் போராடி ஜெயித்த இவள் வீட்டு நிர்வாகம்,திட்டமிடல் அனைத்தையும் கணவன் இன்றியும் கட்சிதமாய் செய்தவர்.

 

 

 

இன்று இவர் ஆண் சிங்கங்களை அரசியல் என்றும், மார்க்கம் என்றும் வழிநடத்தும் ஆசானாக ,வீட்டு தலைவி/தலைவன் என்ற பாத்திரத்தையும் ஏற்று தன் நிருவாகத் திறனையும் நிரூபித்த இந்த தாய் அரசியலில் கால்பதித்தது இன்னும் சோதனைக்குள்ளான பெண்களின் துயர் துடைக்கவே.

 

 

 

 

இவர் சாதணைப் பொண்..
இவர் வெற்றிக்காய் பிரார்த்திப்போம், தோல் கொடுப்போம்
வாரீர் சகோதரிகளே வாரீர்.

 

By : முஹம்மது இஸ்மாயில் ரிபானா 

One comment

  1. இவரின் தைரியம் அயராத உழைப்பு என்பவற்றை பாராட்டும், எதிர்கால நலனுக்கும் வாழ்த்துக் கூறும் அதேவேளை இவர் 10 வயதில் சரியான அறிவில்லாமல் செய்ததை மீண்டும் NFGG மூலம் செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.