சவூதி வெளிநாட்டு தொழிலாளர்களின் உறவுகள் குறித்த தவணைக்குள் வராவிட்டால் பத்து வருடங்களுக்கு சவூதியில் நுழைவது தடை..!!

· · 865 Views
சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாக்களில் வருபவர்கள் அதிகப்பட்சம் 180 நாட்களுக்கு மட்டுமே நீட்டித்து தங்கிக் கொள்ளலாம். விசிட் விசா காலாவதியாவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக விசிட் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக வழங்கப்படும் எக்ஸிட் விசா ஸ்டாம்பிங் கட்டணமின்றி செய்து தரப்படும் இந்த விசா 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 
இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் மற்றும் இரத்த உறவுகள் யாரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு குறிப்பிட்ட தவணைக்குள் திரும்ப வராவிட்டால் அவர்கள் மீது மீண்டும் உள்நுழைய தடை விதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹஜ்ஜிற்கு முறையான அனுமதியின்றி வருபவர்கள் மீண்டும் சவுதிக்குள் நுழைய 10 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் சுமார் 12 மில்லியன் விசாக்கள் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 30 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னொரு புறம் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளும் நடந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.