சவூதி எங்கும் கடும் மணல் புயல்..!! சவூதியின் கிழக்கு மாகாணம் கடுமையாக பாதிப்பு

· · 669 Views

சவூதி அரேபியாவில் வீசிய கடுமை யான மணல் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

நேற்று முன்தினம்  இரவு சவூதி அரேபியா வில் வீசத் தொடங்கிய மணல் புயல், வளை குடா நாடுகளை முழுமையாகப்  பாதித்தது. அதே நேரத்தில், சவூதியின் கிழக்கு மாகா ணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழு மையாக பாதிக்கப்பட்டது.

sand sunami

கடுமையாக  வீசிய மணல் புயலில் மரங்கள் தூக்கி வீசப்பட்டன. வாகனங்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

சாலைகளில்  முன்னால் சென்ற வாகனங் கள் தெரியாத அளவுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சவூதியின்  தம்மாம், கோபார், ஜூபைல் போன்ற   நகரங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம் பித்தது.  மேலும்  விமான போக்குவத்தும் பெரிதும் பதிக்கப்பட்டது. பல பன்னாட்டு விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்ய பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.