சவூதி இளவரசி ரிமா பிந்த் பந்தார், சவூதியின் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவரானார்..!! சரித்திர நியமனம்

· · 531 Views
சவுதி அரேபியாவின் இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்கள் குறித்த கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளது. பல காலமாக பெண்கள் வாகனம் ஓட்ட அங்கு தடையிருந்து வந்தது.
 
அந்த தடையை சமீபத்தில் அரசு விலக்கியது.
இதனையடுத்து, பெண்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்பாடுகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக முதன் முறையாக பெண் ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் தான் அந்த பெண் ஆவார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதராக இருந்த இளவரசர் பந்தர் பின் சுல்தானின் மகளான ரிமா அரச பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.