சவூதிலாந்து : கொடூர வெயிலின் தாயகம் சவூதியில் பனிப் பெய்து கொள்ளைக் கொண்டது

· · 619 Views

சில நாட்களுக்கு முன்பு அல்ஜீரியா நாட்டின் பாலைவன நகரமான ஐன் செஃப்ரா வில் கடுமையாக பனி பொழிந்தது இயற்கை ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியது.

 

அந்த அதிசய நிகழ்வு தற்போது அரேபிய பாலை வனங்களிலும் நடைபெற்று வருகிறது. சவுதியின் வட மேற்கில் உள்ள தபுக் பகுதியில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டு காணப்பட்டது.

 

 

 

 

இது காலையில் மட்டுமின்றி நாள் முழுவதும் தொடர்ந்து காணப்பட்டது. இது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் இது போல இயற்கை மாறுதல்கள் மனிதர்களுக்கு தரப்படும் எச்சரிக்கை என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

எது எப்படி இருப்பினும் இது போல் நிகழ்ந்த அதிசய விளைவுகள் பலரைக் கவர்ந்துள்ளன. பலர் இதைக் காண வருகின்றன்ர். இந்த நிகழ்வு வீடியோக்கள் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.