” சர்வ ” அதிகாரம் : பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேச 150 அரிசி ஆலைகள் திடீர் திடீர் என மூடல்..!! “யாரோ” அச்சுறுத்துகிறார்கள்..?

· · 616 Views

பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் திடீர் திடீரென்று மூடப்பட்டுக் வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

project3_ricemill_anuradapura

இதுகால வரையுடன் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த சுமார் 150 அரிசி ஆலைகள் இவ்வாறு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுமார் 100 அரிசி ஆலைகள் எதிர்வரும் நாட்களில் மிக விரைவில் மூடப்படும் நிலையை எதிர் கொண்டுள்ளது.

எனினும் குறித்த அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்திக்குத் தேவையான நெல் கிடைக்காத காரணத்தினால் அவை மூடப்படும் நிலையை எதிர்கொண்டதாக ஐக்கிய அரசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித தெரிவித்துள்ளார்.

1994ம் ஆண்டுவரை பொலன்னறுவை மாவட்டத்தின் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்த அப்துல் மஜீதின் பதவிக்காலத்திலேயே பொலன்னறுவை மாவட்டம் அரிசி ஆலைகளின் புகலிடமாக மாறத் தொடங்கியது.

அவரது காலத்தில் சிங்கள, முஸ்லிம் வர்த்தகர்கள் அரிசி ஆலைகளை சுமூகமாக நடத்திச் சென்ற போதிலும், 1994ம் ஆண்டு சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசியல்வாதியொருவரின் சகோதரர் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்களின் அரிசி ஆலைகள் முற்றாகமூடப்பட்டு இயங்காத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன.

இதன் பின்னர் அண்மைக்காலமாக மீண்டும் முஸ்லிம்கள் ஆரம்பித்த அரிசி ஆலைகளும் தற்போது இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.