சரியாப் போச்சுது : N.F.G.G. கட்சிக்கு “இரட்டைப் புலிகள்” சின்னமாக அருளப்பட்டது – ஞானசாரர் கூத்தாடாமல் இருந்தால் சரி

· · 393 Views

ஆறு புதிய கட்சிகளை அரசியல் கட்சிகளாக அங்கீகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

 

இந்த ஆண்டு 92 கட்சிகள் அங்கீகாரம் கோரி தேர்தல் ஆணைக்குழுவிடம் விண்ணப்பங்களை கையளித்திருந்தன. இந்த கட்சிகளில் ஆறு கட்சிகளை அங்கீகரித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆறு கட்சிகளுடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

 

புதிய கட்சிகளின் விபரம்.

  • ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – செயலாளர் மைத்திரி குணரத்ன – சின்னம் – வாழைப்பழ சீப்பு
  • ஐக்கிய இடதுசாரி முன்னணி – செயலாளர் லால் விஜேநாயக்க – சின்னம் – தோணி
  • தொழிலாளர் தேசிய முன்னணி – செயலாளர் எம். திலகராஜா – சின்னம் -வெட்டுக்கத்தி
  • தேசிய ஐக்கிய முன்னணி – செயலாளர் எம். அசாத் சாலி – சின்னம் – மூக்குக் கண்ணாடி
  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – செயலாளர் எம்.ஆர்.மொஹமட் நஜா – சின்னம் இரட்டை புலிகள்
  • இலங்கையின் சமவுடமை கட்சி தலைவர் மகிந்த தேவகே – சின்னம் – பலூன்

Leave a Reply

Your email address will not be published.