சபைகளின் பதவிக்காலம் மார்ச் 6 ல் ஆரம்பம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானவர்கள் கட்சித் தாவ முடியாது, சபைகளின் தலைவர்களை உள்ளூராட்சி ஆணையர் தெரிவு செய்வார் – அரசாங்கம் அறிவிப்பு

· · 499 Views

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பமாவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் பற்றி சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

இதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்களுக்கு பொருத்தமான அங்கத்தவர்களை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் இயல்பு பற்றி அங்கத்தவர்கள் தீர்மானிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் பிரகாரம் உள்ளூராட்சி அங்கத்தவர்கள் கட்சி தாவமுடியாது. அவ்வாறு காட்சி தாவுவோரின் உறுப்பினர் பதவி இரத்தாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல் இருக்கும் பட்சத்தில் எதிர்கால உள்ளூராட்சி தேர்தல்களில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அமைச்சு விடுத்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.