சனத்துக்கு எதிராக கோர்ட் படியேறுகிறார் ரங்க..!! தேர்தலும் ரத்தானது – ஆனமடுவ

· · 671 Views

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக அமைச்சர் ரங்கே பண்டார நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

range 2

புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தேர்தல் தொகுதியின் கூட்டுறவு பணிப்பாளர் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதன் போது புத்தளம் மாவட்டத்தின் இருதுருவ அரசியல்வாதிகளான கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் சனத் நிஷாந்த எம்.பி. மற்றும் அமைச்சர் ரங்கே பண்டார ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் சகிதம் தேர்தல் நடைபெற்ற இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டுறவுச் சபை தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று தெரிவித்து கூட்டுறவு ஆணையாளர் இன்று அதனை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டுறவுச் சபை தேர்தல் நியாயமாக நடைபெறாமல் போனதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ரங்கே பண்டார,

சனத் நிஷாந்த தரப்பினர் போலியான வாக்காளர்களை பதிவு செய்து நியாயமானமுறையில் தேர்தலை நடத்தவிடாமல் குழப்பியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.