சதொசவில் CCTV அமைக்கும் ஒப்பந்தம் அரிசி முதலாளிக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு !!

· · 533 Views

கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள், அரச நிறுவனங்களில் பலவற்றில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் கேள்விபத்திரங்களை வழங்கும் போது இடம்பெறும் ஊழல்கள் குறித்து இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் மீடியாக்கள்  வெளியிட்டிருந்தது.

 

 

 

 

மீண்டும் இன்னுமொரு ஊழல் குறித்த தகவல்களை தற்போது வெளியிட்டு இருக்கிறதன மீடியாக்கள் .

 

 

 

 

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தைப் பொறுப்பேற்ற பின்னர் ச.தொ.ச நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ச.தொ.ச நிறுவனத்திற்குள் பல்வேறு வழிகளில் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

ச.தொ.ச நிறுவனத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக அவர்களைப் போசித்துக் கொள்வதற்காக தரகுப் பணத்தை இலக்கு வைத்து செயல்படுகின்றனர்.

 

 

 

புதிய கணனி கட்டமைப்பு

ச.தொ.ச நிறுவனம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் புதிய கணனி கட்டமைப்பொன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. அத்துடன், ச.தொ.ச நிலையங்களில் CCTV கெமராக்களைப் பொருத்த திட்டமிடப்பட்டது.

 

 

 

 

இந்த செயல் திட்டத்தை முன்னெடுக்க இதற்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏராளமான கேள்விப் பத்திர விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

 

 

 

 

எனினும், இந்தத் திட்டத்தை softwatch நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. எனினும், குறித்த நிறுவனத்திற்கு CCTV கெமரா பொருத்தும் துறையில் அதிக அனுபவம் இல்லை எனவும், அனுபவம் நிறைந்த பல நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பித்திருந்ததாகவும் தெரியவருகிறது.

 

 

 

 

இதற்கு பல நிறுவனங்கள் விண்ணப்பத்திருந்த போதிலும் softwatch நிறுவனத்திற்கு வழங்க ச.தொ.ச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். softwatch நிறுவனமானது கோடீஸ்வர வர்த்தகரான ராஜன் என்பவருக்குச் சொந்தமானது. இவரது பிரதான தொழில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதாகும்.

 

 

 

 

 

அடிக்கடி நாட்டில் ஏற்படும் அரிசி தட்டுப்பாட்டின்போது, அரிசி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோடிகளை சம்பாதித்துள்ளனர். இதில் குறித்த தொழிலதிபரும் ச.தொ.ச உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த தொடர்புகளே மேற்குறிப்பிட்ட CCTV கெமரா பொருத்தும் ஒப்பந்தத்தை softwatch நிறுவனத்திற்கு வழங்க வழி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.