சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிற்கு வழங்க வேண்டாம்..!!பிரதமரிடம் வேண்டிக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ

· · 1636 Views

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நாடு திரும்பும் வரை, சட்டம் ஒழுங்கு அமைச்சின் பொறுப்புக்களை ஜனாதிபதியின் வைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

இதன்படி சரத் பொன்சேக்கா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.

 

 

 

 

 

இந்த நிலையில், சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவது குறித்து ராஜபக்ச குடும்பத்தினர் கடும் குழப்பமடைந்துள்ளதாக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

இந்த அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் வரும் அமைச்சு என்பதால், ஐ.தே.கவின் கீழ் இதனை தொடர்ந்தும் வைத்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமவிற்குத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

அத்துடன், இந்த அமைச்சிற்கு மிகவும் பொருத்தமானவர் வஜிர அபேகுணவர்தன அல்லது கயந்த கருணாதிலக்க என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

எனினும், ஜனாதிபதி இந்த அமைச்சைக் கோரினால், அதனை ஜனாதிபதிக்கு கொடுக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

அத்துடன், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ய தன்னால் முடியாது எனவும் குறுிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

இதேவேளை, தான் பதவிகளை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை எனவும், எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் தந்தால் ஆறு மாத காலத்திற்குள் தரமான சேவையை அந்த அமைச்சின் ஊடாக வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

கடந்த மூன்று வருடங்களில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக குறிப்பிடத்தக்களவு எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சரத் பொன்சேக்கா, இதற்குக் காரணம் அமைச்சில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நீதியமைச்சுத் தடையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

நீதியமைச்சராக விஜயதாஸ ராஜபக்ச பதவி வகித்த போது சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கும் நீதியமைச்சும் இடையே கயிறிழுக்கும் போட்டியொன்றை அவர் உருவாக்கியிருந்ததாகவும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள திறமையான அதிகாரிகள் அவர்களின் பணிகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும், திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக விஜேதாஸ ராஜபக்ச திருடர்களைப் பாதுகாத்ததாகவும் சரத் பொன்சேக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

 

 

 

 

இறுதியாக சட்டம் ஒழுங்கு அமைச்சு தனக்கு வழங்கப்படுமாயின் தனது சேவையையும், பணிகளையும் அனைவரையும் பார்த்துக் கொள்ள முடியும் என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

One comment

Leave a Reply

Your email address will not be published.