சட்டத்தை பாதுகாக்க முடியாவிட்டால் காவல்துறையினர் வீடு செல்ல வேண்டும் – ரவி கருணாநாயக்க

· · 107 Views
சட்டத்தை பாதுகாக்க முடியாவிட்டால் காவல்துறையினர் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய, திகன சம்பவங்கள் தொடர்பில் பிரதமரையோ ஜனாதிபதியையோ குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய கடப்பாடு காவல்துறையினருக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனங்களுக்கு இடையில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.