கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் களமிறங்கும் ஒமர் காமில்..!! காமிளுடன் முட்ட பயப்படும் அசாத்சாலி, பேரியல் அஷ்ரப், ரோஷி சேனாநாயக்க

· · 904 Views

உள்ளுராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடுபவர்கள் குறித்து அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நாட்டில் பிரதான மாநகர சபை என்பதாலும், அதிக வாக்காளர்கள் இருப்பதாலும் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

 

 

 

இதனால் கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் மாநகர மேயர் வேட்பாளர்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இதனால் தேசிய ரீதியாக பிரபலமான, நன்மதிப்பைப் பெற்ற நபர்களைக் களமிறக்குவதற்கு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

 

 

இம்முறை கொழும்பு மாநகர சபைக்கு பிரதான அரசியல் கட்சிகள் ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாம் இதற்கு முன்னரும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

 

 

இதில் குறிப்பாக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச மாநகர மேயர் பதவி வேட்பாளராக களமிறங்க தயாராகி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். எனினும், இதற்கு கோதாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொதுஜன முன்னணி சிறந்தவொரு வேட்பாளரைத் தேடிவந்தது. இந்த நிலையில், முன்னாள் மாநகர மேயரும், முன்னாள் ஆணையாளருமான ஓமர் காமில் அவர்களைக் களமிறக்க பொதுஜன முன்னணி தயாராகியுள்ளது.

 

 

 

 

இவர், 1997ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு நகர ஆணையாளராக நியமனம் பெற்றார். 2006ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்ச்சியாக நகர ஆணையாளராக பணியாற்றிவந்துள்ளார். இதனால் ஓமர் காமிலை மாநகர சபை வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்து, பொதுஜன முன்னணி இதுகுறித்து பேச்சு நடத்தி வருகிறது.

 

 

 

இந்த நகர்வு காரணமாக, இதுவரை கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

ஓமர் காமில் சிங்கள வாக்குகளை தன்வசப்படுத்தக்கூடியவர் என்பதால் சிறு கட்சிகளும் இந்த நகர்வினால் அச்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரோசி சேனாநாயக்கவை களமிறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும், ரோசிக்கு சிங்கள வாக்குகளோ, ஏனைய வாக்குகளையோ கவரக்கூடிய சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

இதற்கு மிக முக்கிய காரணம், ரோசி சேனாநாயக்க கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன், அவர் ஒரு தோல்வி வேட்பாளர் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இருப்பதால் அவருக்கு கடும் போட்டியை வழங்க முடியாது என ஐ.தே.க உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

அத்துடன், ரோசி சேனாநாயக்கவின் மதக் கொள்கை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள வாக்குகளை பிரியச் செய்யும் எனுவும் ஐ.தேக. உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

இதேவேளை, தூதுவர் பதவி வகிக்கும் ஏ.ஜே.எம். முசம்மிலை மேயர் வேட்பாளராக களமிறக்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எனினும், இதற்கு முசம்மில் இதுவரை சம்மதிக்கவில்லையெனத் தெரியவருகிறது. எனினும், ஓமர் காமிலை எதிர்க்கும் அளவிற்கு முசம்மில் பலம்வாய்ந்தவர் அல்ல என ஐ.தே.க. உறுப்பினர்கள் கருதுகின்றனர். எனினும், கொழும்பிலுள்ள கட்சி ஆதரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பொரளை தொகுதி அமைப்பாளர் அஜித் பதிரணவை நிறுத்துமாறும் கோரியுள்ளனர். ஓமர் காமிலை எதிர்க்கக் கூடியவர் என்பதுடன் குறைந்தபட்சம் சிங்கள வாக்குகளை அவரால் கவரக் கூடியதாக இருக்கும் என ஐ.தே.க. தரப்பினர் நம்புகின்றனர்.

 

 

 

 

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமை அஜித் பத்திரண குறித்து விருப்பம் வெளியிடவில்லை எனத் தெரியவருகிறது.

 

 

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது, மேயர் வேட்பாளர் தோல்வியடைந்தால் அது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என ஐ.தே.க. உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

இதன்போது முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியமானது எனவும், அவர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தோல்வியடையக்கூடும் எனவும் ஐ.தே.க உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

ஶ்ரீ.ல.சு.கட்சி சார்பாக முஸ்லிம் வேட்பாளர்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கொழும்பு மாநகர சபை வேட்பாளராக பேரியல் அஷ்ரப்பை களமிறக்கும் யோசனையொன்று இருப்பதாக கட்சி தரப்பினர் தெரிவிக்கின்றனர். பேரியல் அஷ்ரப்பிற்கான வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் அசாத் சாலியைக் களமிறக்குவதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், அசாத் சாலி இதுவரை இதற்கு இணக்கம் வெளியிடவில்லை. ஓமர் காமிலை எதிர்க்க முடியாது என்பதை அசாத் சாலி அறிந்து வந்திருப்பதால் இதற்கு இன்னமும் இணக்கம் வெளியிடவில்லை எனத் தெரியவருகிறது. அத்துடன், எதிரிசிங்க குடும்பத்திலிருந்து தீபா எதிரிசிங்கவைக் களமிறக்குவதற்கு கட்சிக்குள் எதிர்ப்புக்கள் உள்ளன. இதனால் இதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கிறது. தீபா எதிரிசிங்க களமிறக்கப்படுவது எவ்வகையிலும் ஓமர் காமிலுக்குப் போட்டியாக இருக்காது.

 

 

 

 

கொழும்பு நகர சபையில் வெற்றிபெறுவதாயின் முஸ்லிம் வாக்குகளை வெற்றிகொள்வது கட்டாயமாகும். இதனை ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி சரியாக கணித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை மேயர் பதவிக்கு களமிறக்காவிடின், முஸ்லிம் வாக்குகளைக் கவரக்கூடிய முஸ்லிம் வேட்பாளர்கள் சிலரைக் களமிறக்குவது கட்டாயமாகும். அவ்வாறு இல்லையெனில் பாரிய பிரசாரமொன்றை முன்னெடுக்க நேரிடும்.

 

 

 

 

கொழும்பு நகரில் முஸ்லிம்களுக்கான வாய்ப்பு

ராஜபக்ச தரப்பினர் மீது கொழும்பிலுள்ள முஸ்லிம்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ராஜபக்ச ஆட்சி காலத்தல் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களே இதற்குக் காரணமாகும். இதனை ராஜபக்ச குடும்பத்தார் நன்கு அறிந்துள்ளனர். இதனால், முஸ்லிம் வாக்குகளைக் கவருவதற்காக ராஜபக்ச தரப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

 

 

 

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது மேயர் வேட்பாளர்களாக யாரைக் களமிறக்குவது என்பது குறித்து பெரும் சவாலை எதர்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.