கே.ஏ. பாயிஸ் போட்ட திட்டத்தினை, அவரின் பழைய தலைவர் நிறைவேற்றுவாரா..? ஒரு அநியாயத்தின் கதை இது

· · 1525 Views

விடாது பொழியும் அடை மழையும் , விரட்டியடிக்கும் வெள்ளமும் – புத்தளத்தின் தொடர்கதை
—————————–

வருடா வருடம் புத்தளம் நகர மக்களுக்கு மழை காலம் வந்துவிட்டாலே ஒரு பீதி தொற்றி கொள்ளும் – அது ஏன் எனில் புத்தளம் ஏற்படும் வெள்ளம் .

இந்த வருடத்தின் மக்கள் பயத்தின் ஆரம்பம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் – ஆம் மழைக்காலம் ஆரம்பம்.

vellam-2

இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன ?

ஒழுங்கான வடிகாலமைப்பு திட்டம் இன்மையால் ஏற்படும் அசௌகரியமே இதுவாகும்.

1998 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியோடு மிகப்பெரிய வடிகால் திட்டமொன்று நமது நகருக்கு கடன் அடிப்படையில் கிடைத்தது.

புத்தளம் நகரின் அனைத்து பகுதிகளுக்கும், தில்லையடி வரையிலுமாக இந்த திட்டத்திற்கான திட்ட வரைபு (Proposal) கடன் வழங்கும் நிறுவனமான ADB அமைப்பிற்கு வழங்கப்பட்டு அதற்கான அங்கீகாரத்தையும் அப்போதைய நகர சபையின் முதலவாது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான நகர பிதா K.A.பாயிஸ் பெற்றும் இருந்தார்.

Image result for puttalam flood

அதன் ஒரு கட்டம் அதாவது மலேரியா கால்வாயின் பணிகள் பூர்த்தியான நிலையில் புத்தளத்தில் நடந்த அரசியல் சித்து விளையாட்டுக்களின் காரணமாக அந்த திட்டம் அப்படியே கை விடப்பட்டும் போனது – இன்று 18 வருடங்கள் ஆகியும் அது அப்படியே கிடப்பில் உள்ளது.

இந்த தடைக்கான அரசியல் சித்து விளையாட்டின் முக்கிய அங்கம் என்னவெனில் நகர சபையின் வருமானத்தை அதிகரித்து காட்டியே கடன் கோரப்பட்டு இருந்தது. இல்லையேல் கடன் கிடைக்காத ஒரு சூழல் அன்று இருந்தது.

இதனை நிறுத்த முயற்சி செய்தோர் எடுத்த துருப்பு சீட்டு இந்த கணக்கு விபரம் தான் – தாங்கள் நேர்மையான கணக்கினை காட்டுகிறோம் எனும் கோதாவில் அரசியல் பழிவாங்கலுக்காய் கடன் கோரப்பட்ட அமைப்புக்கு (ADB) கோரிக்கைகளை கொடுத்ததும், பெட்டிசன்கள் அனுப்பியதும் புத்தளம் மக்களின் முதுகில் குத்திய பாதக செயலாகும்.

Image result for puttalam flood

எல்லாமே கடந்த பின்பும் இன்னும் நமது நகரின் வடிகான்கள் அப்படியே இருப்பது கவலை தான்.

இதிலே ஆறுதல் பட கூடிய ஒரு விடயமும் இருக்கிறது, இறுதியாக நகர சபை தலைவராக இருந்த சகோதரர் K.A.பாயிஸ் கடந்த அரசிலே உருவாக்க பட்ட ‘புற நெகும’ திட்டத்தின் கீழ் பல பகுதிகளின் வடிகால் சீர்திருத்தத்திற்கான பழைய திட்ட நகலை அப்படியே வழங்கி இருந்தார்.

அதன் முதல் கட்ட பணிகள் தான் கடையாகுளம் பகுதியில் இடம்பெறுகிறது.அடுத்து இவை புத்தளம் நகரின் மத்திக்குள் அதாவது போல்ஸ் வீதியை நோக்கி வர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புத்தளம் நகர் முழுவதற்குமான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பினும் மேலே கூறப்பட்ட இரண்டு இடங்களும் தான் வேலைகள் இடம்பெறும் என்று உறுதியாக இனம் காணப்பட்ட இடங்கள் ஆகும். எஞ்சிய பகுதிகளை நிவர்த்திக்க நிதிகள் போதாமல் போகலாம்.

ஆக இதுவும் முழுமை பெறாமல் போகுமோ எனும் கேள்விக்குறி ஒன்று இங்கே காணப்படுகிறது.

இந்த நேரம் இதற்குள்ள இன்னொரு சாதக தன்மை என்னவெனில் வடிகாலமைப்பு அமைச்சு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கீழ் இருப்பதும் , அந்த கட்சியின் ஊடாக பலர் அபிவிருத்தி பணிகள் செய்ய பாடு படுவதும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

இவர்கள் இந்த விடயத்தை செய்து முடிக்க தங்களது அழுத்தங்களை பிரயோகிப்பார்கள் எனில் ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா , கொரியாவின் கொய்க்கா , ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்று பல நிறுவனங்கள் ஊடாக நிதிகளை பெற்று பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.

இன்று கண்டி நகரிலே இதே அமைச்சின் கீழே சீனா நாட்டின் உதவியோடு பாரிய நீர் திட்டம் ஒன்றும் , ஜப்பான் நாட்டின் உதவியோடு பாரிய திரவ கழிவு திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்த படுவதும் நாம் உதாரணமாக எடுக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.

ஆக , இவ்வாறான திட்டங்கள் நமது நகருக்கும் கொண்டு வரப்பட வேண்டும் எனும் அவா நிறைவேறுமா? – பொறுத்திருப்போம்.

முஹம்மது  இன்பாஸ்

Leave a Reply

Your email address will not be published.