கே.ஏ. பாயிஸை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்துக் கொள்ள அமைச்சர் றிஷாத் மும்முரம் !! மாறும் அரசியல் காட்சிகள் – எம்.பி.யாவாரா கே.ஏ.பி..?

· · 1972 Views

அமைச்சர் றிசாத் உடன் பயணிக்க தயாராகும் கே. ஏ. பாயிஸ்.

 

 

நடைபெற்ற புத்தளம் நகர சபை தேர்தலில் சிறந்த ஒரு பெறுபேற்றை வெளிப்படுத்திய அல்ஹாஜ். கே. ஏ. பாயிஸ் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்துக்கொள்ள அமைச்சர் றிஸாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

கிழக்கு மாகாணம் உட்பட எல்லா மாவட்டங்களிலும் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ள முஸ்லீம் காங்கிரஸ், புத்தளத்தில் ஓரளவு வாக்குகளை அதிகரித்திருப்பது கே.ஏ. பாயிஸ் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கே எனவும், முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகள் அல்ல எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

அதே நேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பாயிஸ் அவர்களை இணைத்து கட்சியின் தேசிய அமைப்பாளராக அவரின் நிலையை உயர்த்த உள்ளதாக அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட அமைப்பாளரை வைத்துக்கொண்டு, பல்வேறு அபிவிருத்திகளை செய்தும் கூட, சொந்த வட்டாரங்களை இவர்களால் வெல்ல முடியாது போனது தனக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதாக அமைச்சர் தனது விசனத்தை அவரின் நெருங்கிய தரப்பினரிடம் கூறியுள்ளார்.

 

 

 

 

 

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அல்ஹாஜ். நவவி அவர்களை மயில் சின்னத்தில் களமிறக்கி, அவரின் தேசிய பட்டியல் பதவியினை கே. ஏ. பாயிஸ் அவர்களுக்கு வழங்கி, தனது கட்சியினை மேலும் பலப்படுத்தி, 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் கே. ஏ. வட்டாரங்களை இவர்களால் வெல்ல முடியாது போனது தனக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதாக அமைச்சர் தனது விசனத்தை அவரின் நெருங்கிய தரப்பினரிடம் கூறியுள்ளார்.

 

 

 

 

 

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அல்ஹாஜ். நவவி அவர்களை மயில் சின்னத்தில் களமிறக்கி, அவரின் தேசிய பட்டியல் பதவியினை கே. ஏ. பாயிஸ் அவர்களுக்கு வழங்கி, தனது கட்சியினை மேலும் பலப்படுத்தி, 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் கே. ஏ. பாயிஸ் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்துக்கொள்ள, நவவி அவர்கள் பாயிஸ் அவர்களின் தோட்டத்துக்கு சென்று வந்தமை யாவரும் அறிந்த விடயமே.

 

 

 

 

 

புத்தளம் மாவட்ட அமைப்பாளரின் தலையீட்டால்,கட்சிக்குள் அவரை இணைத்துக்கொள்ள முடியாது போனதாகவும் நடைபெற்ற நகர சபை தேர்தலின் பின்னர், அமைச்சர் இது விடயத்தில் ஒருமித்த முடிவில் இருப்பதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

-ஒற்றன்

2 comments

Leave a Reply

Your email address will not be published.