கே.ஏ.பாயிஸின் மகத்தான சாதனை : 30 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டரங்க வேலைகள் முடிவு !! சாதனையும்..வேதனைகளும்

· · 3618 Views

ஒரு சரக்கு வண்டி (Goods Train) காங்கேசன் துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு இடைப்பட்ட அத்தனை நிலையங்களிலும் நின்று நின்று, ஏனைய புகையிரதங்கள் போக இடம் விட்டு ஆடி அசைந்து தெற்கே கொழும்பு  கோட்டை  நிலயத்தை அடைவது போலத்தான்  புத்தளம் நகர விளையாட்டரங்கு நிருமாணப் பணிகள் ஆடி அசைந்து இறுதிக் கட்டத்தை அடைந்து நகர சபையிடம் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறன.

ucg-1

காய்தல் உவத்தலுக்கு அப்பால்  யதார்த்தத்தை  ஏற்றுக் கொள்வதானால்  30 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கு கட்டமைப்பைப் புத்தளம் நகரத்துக்குக் கொண்டு வந்தற்கான Credit  முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸைச் சேரும்.

2012 ஆம் ஆண்டில்   மகிந்தானந்த அழுத்கமகே மத்திய  விளயைாட்டுத் துறை அமைச்சராகவும், அசோகா வடிகமங்காவ வடமேல் மாகாண விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த நாட்களில் புத்தளம் மாவட்டத்தின் ஏனைய நான்கு தொகுதிகளின் பலம் வாய்ந்த அமைச்சர்களின்   சவால்களுக்கு மத்தியில்  இந்த விளைாயாட்டரங்கை புத்தளத்துக்குப் பெற்றுக் கொண்டு ஒரு சாதனையை  பாயிஸ் நிலை நாட்டியிருந்தார்.

ucg-2

    நல்லதை  நல்லதென்று சொல்ல வேண்டும் என்று வாதிடுபவர்கள் இதை பாராட்டத் தயங்க மாட்டார்கள்.  நமக்கு நினைவு தெரிந்த நாட்களில்  புத்தளம் நகரத்தில்  30 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஒரு பாரிய செயற்திட்டம் இது என அடையாளப்படுத்தலாம்.

400 மீற்றர் மைதானம்;  ஒரு பார்வையாளர் .அரங்கு; 25 மீட்டர் நீச்சல் தடாகம்; உள்ளக விளையாட்டரங்கு ஆகிய நான்கு அம்சங்களை  உள்ளடக்கிய இந்த விளயைாட்டரங்கிற்கு 2012 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட  கையோடேயே  மாரி காலம் தொடங்கிவிட்டது.  நீர் தடாகங்கள் போலக் காட்சியளித்த மைதானங்களை செப்பனிட்டு , வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு,  நிறுத்தித், தொடங்கி, நிறுத்தித் தொடங்கி இப்போது  நான்காவது மாரி காலமும் தொடங்கி மழை கொட்டிக் கொண்டிருக்கும் காலப் பகுதியில்தான் வேலைகளை முடித்து அந்த நிருமாணத் தொகுதியை புத்தளம் நகர சபைக்குக் கையளிக்குமாறு  ஒப்பந்தக்கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நகர சபை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

ucg-3

திட்டத்துக்கு தற்போது பொறுப்பாயுள்ள  நகர சபை தொழில்நுட்ட அலுவலர்  கமர்தீன்  கஸானி தரும் தகவலின் அ‌டிப்படையில்  உள்ளக விளையாட்டரங்கில் மாத்திரம் தளத்துக்கு பலகை பதிக்கும் வேலைகள்  எஞ்சியுள்ளது.  மற்றப்படி  தொன்னூற்று ஐந்து வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன. விளையாட்டுக் களம்  சம நி‌லையில் இல்லாததால் அதை சீர் செய்து தருமாறு விளையாட்டு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அலுவலர் கஸானி தெரிவித்தார்.

புத்தளம்  விளையாட்டரங்குடன் சேர்த்து இன்னும் ஐந்து இடங்களில் இப்படி நவீன மாவட்ட விளையாட்டரங்குகள் அமைக்கப்பட்டாலும் அப்போதைய விளயைாட்டுத் துறை அமைச்சரின் சொந்த பிரதேசமான நாவலப்பிட்டியில்தான் முழுமையான விளயைாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மற்றவைகள் அறையும் குறையும்தான்.

ucg-%e0%af%aa

பார்வையாளர் அரங்கில் ஆசன வசதிகள் இல்லை, மைதானத்தில் ”கார்பட்” வசதிகள் இல்லை;  உதை பந்தாட்டத்துக்கான ஏற்பாடுகள் இல்லை.  இவைகளை புத்தளம் நகர சபைதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இது இவ்வாறிருக்கு இந்த விளயைாட்டரங்கின் செயற்பாடுகளுக்காக குறைந்தபட்சம் 24  ஊழியர்களாவது அவசியம்.   இவற்றையெல்லாம்  தாங்கும் வலிமை நகர சபைக்கு உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறி.

விளயைாட்டுத் துறையுடன் தொடர்புடைய 16 பேருக்கான தொழில் வாய்ப்பு இங்கு உள்ளது. இந்த ஆளணியை உருவாக்குவது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சு  திறைச்சேரிக்கு விதற்புரை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற உள்ளதாக  கஸ்ஸானி தெரிவித்தார்.

kab-blue-shirt

இந்த விளையாட்டரங்கு பராமரிப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அனுபவம் சபையிடம் இல்லாத காரணத்தால் இந்த விளயைாட்டரங்குடன் சேர்த்து தொடங்கப்பட்டு நிருமாணப் பணிகள் முடிவடைந்து ஏற்கனவே செயற்பட்டுவரும் நாவலாப்பிட்டி விளையாட்டரங்கிற்கு  புத்தளம் நகர சபையின் குழு ஒன்று விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த  விஜயத்தின் பின்னர்தான்  விளையாட்டரங்கின் அம்சங்களை வாடகைக்கு விடுவதற்கான விதி முறைகள், கட்டண முறைகள் என்பன வடிவமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டரங்கு நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அங்கு வி்ளையாட்டுப் பயிற்சிகளை மேற் கொள்ள இலாவசமாக எந்த ஒரு விளையாட்டுக் களகத்துக்கோ, பாடசாலைக்கோ வழங்கப்பட மாட்டாது. உரிய கட்டணத்தைச் செலுத்தித்தித்தான்  அதை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆயினும்  நகர சபையின் அ்லுவலரும் , விளையாட்டுத் துறையினருமான எம்.எஸ்.எம். ரபீக் தகவல் தருகையில்  உள்ளக விளையாட்டரங்கில் பாடசாலைா மாணவர்கள், மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விஷேட ஏற்பாடு செய்வது பற்றி  நகர சபை ஒன்று தெரிவு செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான  தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படாலம் எனத் தெரிவித்தார்.

kab-graound

புத்தளம் விளையாட்டரங்கு  மெய்வல்லுனர் நிகழ்சிசகள், நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டுக்களுக்காக மாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால்  உதை பந்தாட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமான ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக தனியான திட்ட வரைபு ஒன்று எழுதப்பட்டு அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைளை நகர சபைதான் செய்யவேண்டும்.

இ‌வற்றைச் செய்வதானால்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை ஒன்று இருக்க வேண்டும். உள்ளுராட்சித் தேர்தலும் அண்மையில் இருப்பதற்கான  சாடை மாடைகூட இல்லாத நிலையில்  இந்த செயற்பாடுகள் எப்படிச் செய்யப்படவுள்ளன என்பதும் கேள்விக் குறியோ.

வேதனையான அடுத்த பக்கம்

இந்த ஆக்கத்துக்கான படங்களை எடுத்துக் கொள்வதற்காக நாம் எம்.எஸ்.எம். ரபீக்குடன்  விளையாட்டரங்கு வளாகத்துக்கு சென்றிருந்தோம். அவ்வேளை  இது வரையில் நாம் கேள்விப் படாத வேதனையான பக்கங்களை எமக்கு அவர் சுட்டிக் காட்டினார்.

”அங்கே பாருங்கள்…..” என்று ரபீக் அவர்கள் காட்டிய தி‌சையை நோக்கிப் பார்த்தபோது  எமது வேதனை இரட்டிப்பாகியது. அங்கே  ஒரு நபர்   மதில் ஓரமாக  சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்.  புத்தளம் பஸ் நிலையத்தில் புத்தளம் நகர சபையால் மிக நன்றாகப் பராமரிக்கப்படும்  கழிவ‌றை ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்று வேறு வேறாக இருந்தாலும்  எந்தப் பெண்ணும் பாதையில் நின்று சிறு நீர் கழிப்பதில்லை.  ஆனால் ஆண்கள் மட்டும்   ” பாமரராய், விலங்குகளாய்………. 30 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டரங்கை கழிவறையாகப் பாவிக்கிறார்கள்.

விளையாட்டரங்கின்  குருநாக்கல் பக்கமாக உள்ள முன் பகுதியில் இடப்பக்கமாகவும், வலப் பக்கமாகவும் இரண்டு கேட்டுக்கள் உள்ளன.  அதற்கு இரவில் போடப்படும் பூட்டுக்கள் உடைக்கப்படுகின்றனவாம்.  அந்த அரங்கின் ஊடாக நமது நடை பாதையை வைத்துக் கொண்டுள்ள  பொலீஸாரின் வேலைாயாகவும் இருக்கலாம் என அங்கிருந்து ஒரு  ஊழியர் தெரிவித்தார்.

புத்தளம் பெலிஸ் நிலையத்துக்கும்  விளையாட்டரங்கிற்கும் இடையில் மதில் அமைக்கப்படாது  வெறுமனே கம்பி வேலை அமைக்கப்பட்டுள்ளது.   அங்கு மதில் ஒன்றை அமைக்க பொலீஸார் தடையாக இருக்கிறார்கள் எனச் சொல்லப்பட்டது.   அந்த கம்பி வேலியை  ஒரு ஆள் உயரத்துக்கு போலீஸ் பக்கமாக உடைத்துள்ளார்கள்.  நாம் பேசிக் கொண்டு இருக்கும் தருணத்திலேயே இரண்டு பொலிஸார்  அதன் ஊடாக விளயைாட்டுத் திடலைத் தாண்டி நடப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

புத்தளம் விளையாட்டரங்கு மாவட்டத்துக்கான விளையாட்டரங்கு.  இந்த மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்குமான விளையாட்டரங்கு.   இனி வரும் காலங்களில் மாவட்ட மெய்வல்லுநர் போட்டிகள் அனைத்தும் இங்கேதான் நடக்கப் போகிறது.   நகரத்துக்கு அதன் நிமித்தம் வந்து போவோர் தொகையும் அதிகரிக்கப் போகிறது.  ஆனாலும் கறுப்புத் தரவைக்கு  கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த 30 கோடி ரூபா விளையாட்டரங்கிற்கு வழங்க நமது முக்கியஸ்தர்கள் தயாராக இல்லை என்பது வேதயைின்  கோடிக்டுக் காட்டப்பட வேண்டிய ஒரு பகுதி..

ரசீம் மஹ்ரூப்

One comment

Leave a Reply

Your email address will not be published.