கேள்வி – பதில் : ” வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை மேயராக / தவிசாளராக தெரிவுசெய்ய முடியுமா..? விடை என்ன..?

· · 637 Views

கேள்வி : வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை மேயராக/ தவிசாளராக தெரிவுசெய்ய முடியுமா?

 

‘Please wait here to be unseated.’

 

இந்த சட்டப்பிரச்சினைக்குக் காரணம் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திருத்தத்தின் சரத்து 66B(1) இல் பாவிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சொற்பிரயோகம்; என்று கூறப்படுகிறது.

 

 

 

50% அல்லது அதற்கு மேலான ஆசனங்களை உள்ளூராட்சி சபையொன்றில் ஒரு கட்சியோ, சுயேச்சையோ பெறுகின்றபோது தெரிவுசெய்யப்பட்ட ( elected) வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் பிரசுரித்ததன்பின் அக்கட்சியின் செயலாளரை/ சுயேச்சைத் தலைவரை அவர்களின் அங்கத்தவர்களிற்குள்ளிருந்து ( from among members) மேயராக/ பிரதி மேயராக / தவிசாளராக / பிரதித் தவிசாளராக தெரிவு செய்யுமாறு கோரவேண்டும் என்பதாகும்.

 

 

 

இதில் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கின்ற சொற்பிரயோகம் “elected” என்பதாக அறிய முடிகிறது. உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தின் ஏனைய சரத்துக்களிலெல்லாம் “elected and returned “ என்ற சொற்றொடர் பாவிக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு “ elected” என்பது நேரடியாக தெரிவுசெய்யப்படுகின்ற அங்கத்தவர்களைக் குறிப்பதாகவும் “returned” என்பது நியமிக்கப்படுகின்ற பட்டியல் அங்கத்தவர்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றது.

 

 

 

 

அதேநேரம் மேற்சொன்ன சரத்தில் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் ‘தெரிவுசெய்யப்பட்ட (elected) அங்கத்தவர்களின் பெயர்களைப் பிரசுரித்ததன் பின்’ என்ற சொற்பிரயோகம் மாத்திரமே பாவிக்கப்பட்டு “ returned” என்ற சொல் விடப்பட்டிருப்பதனால் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் ஒருவரையே மேயராக/ தவிசாளராக நியமிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

இது தொடர்பான சட்டக் கருத்துரைகள் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

  • மாஹிர் அன்சார்

Leave a Reply

Your email address will not be published.