கேகாலை..நாங்கள்ள பள்ளிவாயிலில் ஆயுதங்கள் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு ராணுவம் பாதுகாப்பு !! FB Post

· · 478 Views

கேகாலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கிராமங்களில் ஒன்றான நாங்கல்ல பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக முகநூலில் அநாமதேய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையை பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒரு சிங்கள தரப்பினர் பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவியின் அறையில் ஆயுதங்கள் இருப்பதாக வதந்திகளை பரப்பி வருவதாக தமிழ் நியுஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

 

இந்த தகவலை குறிப்பிட்ட ஒரு நபர் தனது முகநூல் பக்கத்தில் சிங்கள மொழியில் பதிவேற்றி அதனை பகிர்ந்துள்ளார்.

 

 

இதனைக் அறிந்த பள்ளிவாசல் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் வரகாப்பொல பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

 

 

முறைப்பாட்டுக்கமைய இன்று (06) பள்ளிவாசலுக்கு சென்ற பொலிஸார் சோதனை செய்து அவ்வாறான ஆதராங்களோ அதற்கான தடயங்களோ இல்லை என்று தமது குறிப்பில் பதிந்துள்ளதுனர்.

 

 

 

குறித்த பள்ளிவாசலுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினரும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.