கெத்து : லக்ஷ்மன் கிரியெல்லவின் மகளுக்கு குடைப்பிடித்து பாதுகாப்பு வழங்கும் M.S.D…!! வாய் திறக்க மறுக்கும் பொலீஸ் ஊடக பேச்சாளர்

· · 755 Views
kiriellas_daughter_1

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அந்தரங்க செயலாளராக பணியாற்றும் அவரது மகள் சட்ட விதிமுறைகளை மீறி பிரபுக்கள் பாதுகாப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பிரபு பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை அமைச்சரின் மகள் பெற்று வருகிறார்.

சட்டமுறைப்படி அமைச்சருக்கு வழங்கப்படும் அமைச்சு பாதுகாப்பு பிரிவு வேறு நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க செயற்பட முடியாது.

மாகாண சபை உறுப்பினராக கூட அல்லாத லக்ஸ்மன் கிரிடியல்லவின் மகள் பலாத்காரமாக அமைச்சு பாதுகாப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்தால்கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது அனுமதி பெற வேண்டும். கடும் உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அதனையும் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லையேல் அமைச்சு பாதுகாப்பு பெற முடியாது.

இவ்வாறு இருக்கையில் அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சு பாதுகாப்பு பெறும் அமைச்சரின் மகளுக்கு குடை பிடிக்கும் வேலையையும் அமைச்சு பாதுகாப்பு பிரிவினர் செய்கின்றனர்.

இது தொடர்பில் தகவல் அறிய நாம் பொலிஸ் ஊடகப் பிரிவை அனுகியபோதும் அவர்கள் தகவல் தர மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.