குவைத் பொது மன்னிப்புக் காலம் பிப்ரவரி 23,2018 முதல் ஏப்ரல் 22,2018 வரை மேலும் இரு மாதங்களுக்கு நீடிப்பு

· · 283 Views

குவைத் #பொதுமன்னிப்பு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு/#Amnesty extension two months:

 

 

 

குவைத் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் அல் ஜர்ரா அவர்கள் அறிக்கையை மேற்கோள் காட்டி குவைத் உள்துறை அமைச்சகம்(Moi) சற்று முன் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் பிப்ரவரி 23,2018 முதல் ஏப்ரல் 22,2018 வரையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு பொதுமன்னிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதற்கு முன்னர் அறிவித்த பொதுமன்னிப்பு கடந்த ஜனவரி 29,2018 முதல் பிப்ரவரி 22,2018 வரையில் 25 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

 


சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள தொழிலாளர்கள் பலருக்கு பல்வேறு காரணங்களால் இந்த குறுகிய காலத்தில் பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்ய முடியாத நிலையில் இந்த புதிய அறிவிப்பு பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைப்பு என்பதில் ஐயமில்லை.

 

 

 

 


இது குவைத்தில் உள்ள இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள தொழிலாளர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஆவணங்கள் சரிசெய்ய பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

 

 

 


குவைத்தில் 146000 ற்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த நிலையில் இதுவரையில் 31000 ற்கும் அதிகமான தொழிலாளர்கள் மட்டுமே இந்த பொதுமன்னிப்பை இது வரையில் பயன்படுத்தினர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 


குவைத் அரசின் இந்த புதிய அறிவிப்புக்கு குவைத் வாழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Kuwait MOI grants another amnesty extension two months for illegal expats from Feb 23 to April 22,2018

Leave a Reply

Your email address will not be published.