குவைத்தில் இருந்து 40 வருடங்களின் நாடு திரும்பிய பெண்ணை அழைத்துப் போக யாரும் வரவில்லை !! செத் செவன இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்

· · 1499 Views

சுமார் 40 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

 

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

 

அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த பெண்மணியே 40 வருடங்களுக்குப் பின் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 

இவரை வரவேற்பதற்கும், அழைத்துச் செல்லவும் அவருடைய குடும்பத்தார் யாரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கவில்லை.

 

இதனால் சமூக சேவை திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்ற செத் செவன முதியோர் இல்லத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.