குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை மாதம் முதல் ரத்து..!!

· · 252 Views

குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை 1 முதல் ரத்து.

 

 

குவைத்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2018 ஜூலை 1 ஆம் திகதி முதல் 3,108 வெளிநாட்டவர்களின் அரசு வேலைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பதில் தகுதிவாய்ந்த குவைத்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

 

 

 

இது சம்பந்தமான சுற்றறிக்கையை குவைத் வேலைவாய்ப்புத் துறை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கடந்த 2017 நவம்பர் மாதமே அனுப்பியிருந்தது. இதன் மூலம் கல்வித்துறையில் ஆசிரியர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றி வருவோர் பெரும்பான்மையாக பாதிக்கப்படவுள்ளனர்.

 

 

சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, அதிகமான குவைத்தியர்கள் தனியார் தறைகளில் பணியாற்றுவதைவிட அரசுத்துறைகளில் பணியாற்றுவதையே விரும்புவதாக தெரியவந்துள்ளதுடன் அதன் காரணங்களும் தெரிய வந்துள்ளன. பணி பாதுகாப்பு, பதற்றமில்லாத வேலை, வசதியான மற்றும் குறைவான வேலை நேரம், அதிகமான விடுமுறை நாட்கள் ஆகியவையே குவைத்தியர்களை பெரிதும் ஈர்த்துள்ளன

Leave a Reply

Your email address will not be published.