குறி வைக்கப்டுகிறார் அமைச்சர் றிஷாத்..!! உயிராபத்துக் குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

· · 661 Views
அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவரது பாதுகாப்புப் பிரிவே இந்த வேண்டுகோளை அவரிடம் விடுத்துள்ளதுடன், தமது ஆலோசனையை அவர் கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும்  குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் அவருக்கு, பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு,  இதுகுறித்து தமது முழுக்கவனத்தை திருப்பியுள்ளதுடன், தேர்தல் பிரச்சார நேரங்களில் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.