குடி போதையில் BMW காரை செலுத்தியது கபீரின் மைத்துனர் ரிகாஸ் உசெய்ன்? ஜனாதிபதி மைத்திரி கடுப்பில்

· · 1886 Views

கொழும்பு தலவாத்துகொட கீள்ஸ் அங்காடி நிலையத்திற்கு அருகில் கிமுலா எல ஏறியில் BMW கார் என்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

 

 

இந்த வாகனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தகம் சிறிசேனவிற்குச் சொந்தமான காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

 

 

விபத்து நிகழ்ந்த போது குறித்த காரை தகம் செலுத்தினாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

 

குறித்த விபத்து குறித்த விசாரணைகளின் போது இதனுடன் சம்பந்தப்பட்ட பல தகவல்கள் வெளியாகியதாக ஜனாதிபதி அலுவலகத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

 

 

விசாரணகளில் கிடைத்த தகவல்கள் குறித்தும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜனாதிபதியின் உத்தரவு

இந்த கார் விபத்தில் சிக்கிய போது அதனை யார் செலுத்தியது? அவரை பொலிசார் கைதுசெய்தனரா? இதுகுறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணைகள் என்ன? தான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தபோது, தன்னுடன் தனது மகன் தகம் வந்திருந்த போதிலும், தகம் தான் வாகனத்தை செலுத்தினார் என எவ்வாறு செய்தி வெளியாகியது? உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

இந்த உத்தரவிற்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் ஏராளமான தகவல்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

car 1

குடிபோதையில் வாகனத்தை செலுத்தியவர் கபீரின் மைத்துனர் ரிகாஸ் உசெய்ன்?

 

 

இந்த விசாரணைகளின் மூலம் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, குறித்த வாகனத்தை அமைச்சர் கபீர் ஹசீமின் மைத்துனரான ரிகாஸ் உசெய்ன் என்பவரே குறித்த வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும், இதன்போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

 

நேற்று (17) அதிகாலை 6.15 அளவில் ஏறியில் விழுந்து விபத்தில் சிக்கிய அதிசொகுசு BMW வாகனம் அண்மையிலேயே மோட்டார் பதிவுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வாகனத்தின் உரிமையாளர் ரிஷாட் ஹமட் என்ற பிரபல வர்த்தகர் என்றும் தெரியவந்துள்ளது.

 

net/news/breaking-news-lnw/item/6280-bwm

car 2

 

Leave a Reply

Your email address will not be published.