கீரியங்கல்லியில் ஆர்மி டிரக் மோதியதில் இருவர் பலி !! கல்பிட்டி, நுரைச்சோலை ஏரியாக்காரர்கள்

· · 321 Views

முந்தல், கீரியங்கல்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

 

 

இராணுவ கனரக வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரை முந்தல் வைத்தியசாரலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் இருவர் உயிரிழந்தனர்.

 

கல்பிட்டிய பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

விபத்து தொடர்பில் இராணுவ கனரக வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ வாகனம் மோதி இருவர் பலி (படங்கள்)

 

(படங்கள் மூலம் – அததெரண)

Leave a Reply

Your email address will not be published.