கீதா வீட்டுக்கு : கீதா குமாரசிங்க எம்.பி.யாக பதவி வகிக்க முடியாது !! ஹை கோர்ட் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது

· · 501 Views

கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

 

இன்று குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

 

 

இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்தநிலையில், இரட்டைக் குடியுறிமையுடன் கீதா இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, உயர்நீதிமன்றமும் தனது தீர்பில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.