கீதா குமாரசிங்கவை அடுத்து : “பைசர் முஸ்தபா,ஏ.எச்.எம்.பௌசி, சரத் பொன்சேகா ஆகியோரின் பதவிகளுக்கும் ஆபத்து..? இரட்டைக் குடியுரிமை பிரச்சனை

· · 2051 Views

கீதா குமாரசிங்கவிற்கு எதிராக கிடைக்கப்பெற்ற நீதிமன்ற உத்தரவின் காரணமாக இரட்டைக் குடியுரிமை தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் பல்வேறு நபர்கள் தெரிவிக்கின்றனர்.

MS04272015P_2

தகவல் அறியும் உரிமையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை பெற்றுக் கொடுக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் எமக்கு கிடைத்த தகவல்களின் படி கீதா குமாரசிங்க மட்டுமின்றி மேலதிகமாக இரட்டைக் குடியுரிமை கொண்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க, ஃபைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் இருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அது மட்டுமின்றி 5 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவார்கள்.

எவ்வாறாயினும் கீதா குமாரசிங்கவிற்கு கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கமைய இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கப்படுவதற்கு இடம் உள்ளது. அது மட்டுமின்றி காலி மாவட்ட ஐதேக தேசியபட்டியல் நீக்கப்படுவதற்கு இடமுள்ளதுடன் அவ்வாறு இடம்பெறுமாயின் இந்நாட்டின் அரசியலினுள் பாரியளவு மாற்றம் இடம்பெறுவதற்கு இடம் உள்ளதுடன் பாராளுமன்றத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கப்படுவதுடன் வடகிழக்கு மாவட்டங்கள் பலவற்றில் அவர்களின் வேட்பாளர் பட்டியலும் நீக்கப்படும். அதன் ஊடாக சிறுபான்மை கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

வடமாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில் குறிப்பிட்ட வாக்காளர் பட்டியல் நீக்கப்படுமாயின் அதன் பிரதிபலன் ஐதேகவிற்கே. அதற்கமைய ஐதேகவிற்கு மாவட்ட அடிப்படையில் மட்டுமின்றி தேசிய பட்டியல் அடிப்படையிலும் கருதப்படும் ஆசனம் எண்ணிக்கை அதிகரிப்படுவதுடன் அதற்கமைய அவர்களின் ஆசன எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை 113யும் அதிகரித்துச் செல்லும்.

Leave a Reply

Your email address will not be published.