“கிளி மகாராஜாவின் தாளத்திற்கு ஆடுகிறார்” ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு -Sirasa media piracy

· · 643 Views

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 

இதில் மிக முக்கிய நபராக கிளி மகாராஜா பெயரிடப்பட்டுள்ளார். இவர் மகாராஜா ஊடக வலையமைப்பின் உரிமையாளராவார். ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நெருக்கமாக செயல்படுவதற்கு முன்னரே ரணில் விக்ரமசிங்கவும், கிளி மகாராஜாவும் ஒருகாலத்தில் மிக நெருக்கமாக செயல்பட்டிருந்தனர்.

 

 

 

எனினும், 2010ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த போனஸ் ஆசனங்களுக்கு தான் பரிந்துரைக்கும் இருவரை நியமிக்குமாறு கிளி மகாராஜா ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தார்.

 

 

இந்தக் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்திருந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்டுபாடுகள் ஏற்பட்டன. இதன்பின்னரே ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மகாராஜாவிற்குச் சொந்தமான ஊடகங்களில் விமர்ச்சிக்கப்பட்டார்.

 

 

2015ஆம் ஆண்டு ஶ்ரீரங்காவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததன் காரணமாக மகாராஜாவிறகும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்தது.

 

 

இதனால், ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கும், சஜித் பிரேமதாசவை தலைவர் பதவிக்குக் கொண்டுவருவதற்கும் கிளி மகாராஜா தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டு வந்தார்.

 

 

2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க பதவியேற்றது மகாராஜா தரப்பினருக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.

 

 

இதனால், கிளி மகாராஜாவும், அவரது தரப்பினரும் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயல்பட ஆரம்பித்தனர். ஜனாதிபதி வெற்றிபெற்ற பின்னர் சிரச செய்திப் பிரிவின் உயர் பதவியில் இருந்த ஒருவரை, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். சிரச ஊடக வலையமைப்பில் பணியாற்றிய இன்னும் பலரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்குள் அனுப்பப்பட்டனர்.

 

 

அத்துடன், ஜனாதிபதியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு கிளி மகாராஜா தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். இதற்கமைய கிளி மகாராஜா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான உறவு வலுப்பெற்றது.

 

 

ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்துவதற்காக கிளி மகாராஜா தற்போது ஜனாதிபதியைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறார். இதற்காக ஜனாதிபதிக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவததாக கிளி மகாராஜா உறவுகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

 

இதனால் கிளி மகாராஜாவின் தாளத்திற்கு ஜனாதிபதி ஆடிவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.