கிரிகஹட்ட செலவுக்கு உதவும் : நகர சபையின் / பிரதேச சபையின் சேர்மன், வைஸ் சேர்மன், உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம்..? மாதம் 18 கோடியே 28 செலவாகிறது அரசாங்கத்திற்கு

· · 386 Views

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற/ தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கு சம்பளம்/ படிகள் ( Allowances)மாதாந்தம் வழங்க 18 கோடி 28 இலட்சம் செலவாகும்.

 

 

 

 

மாநகர சபையாயின்( Municipal Council) மாநகர முதல்வருக்கு( Mayor ) மாதாந்தம் ரூபா 30,000 , மாநகர பிரதி முதல்வர் ரூபா 25,000 மற்றும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 மாதாந்தக் கொடுப்பனவை பெற முடியும் (உபசரணைக் கொடுப்பனவு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது).

 

 

 

 

 

நகர சபையாயின் (Urban Council) நகரசபை தவிசாளருக்கு ( Chairman) ரூபா 25,000 , துணைத் தவிசாளருக்கு ரூபா 20,000 மற்றும் சபை உறுப்பினருக்கு ரூபா 15,000 .

 

 

 

 

பிரதேச சபையாயின் (Pradeshiya Sabha) தவிசாளருக்கு ( Chairman) ரூபா 25, 000, துணைத் தவிசாளருக்கு ரூபா 20,000 மற்றும் சபை உறுப்பினருக்கு ரூபா 15,000 படியாக மாதாந்தம் பெற முடியும்.

 

 

 

 

இக் கொடுப்பனவைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் உரிமை கோர முடியாது.

 

 

(1 ) கொடுப்பனவுக்குரிய மாதத்தில் மாதாந்த சபைக் கூட்டங்களில் / செயற்குழுக் கூட்டங்களில் எவற்றிலும் பங்கேற்காதிருத்தல்

 

 

 

 

(2) சம்பந்தப்பட்ட உறுப்பினர் குற்றச் செயலின் பேரில் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் இருத்தல்

 

 

 

 

(3) குறித்த சபையின் நடவடிக்கைகளும் பணிகளும் சட்டத்தின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்தல்.

 

-மாஹிர் அசனார்

Leave a Reply

Your email address will not be published.