“காத்தான்குடியில் ISIS அமைப்பு இயங்குகிறது !! குழு மோதலில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று சிங்கள நாளிதழுக்கு பேட்டி

· · 826 Views

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களில் ஒன்று சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கி வருபவர்கள் என இலங்கை பரம்பரை முஸ்லிம் இனங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய குழுக்கள் இரண்டிற்கிடையே மோதல் ஏற்பட்டது.  இது குறித்து இன்றைய தேசிய சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு இவ்வமைப்பின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

ISIS-is-Israel-650x350

இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு குழு முஸ்லிம்கள் அல்ல எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பில் அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவும் கடுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து நிதியை எடுத்து வந்து முஸ்லிம்கள் என்ற பெயரில் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும், பரப்புவதன் காரணமாகவே இவ்வாறு இஸ்லாமியர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மோதலில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று, ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கு பகிரங்க ஆதரவு வழங்கும் ஒன்று எனவும், இக்குழுவின் கருத்துக்கள், கொள்கைகள் என்பவற்றினால் காத்தான்குடியிலுள்ள பரம்பரை முஸ்லிம் இனங்களுக்கு எதிரானதாகவுள்ளதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

இக்குழு பரம்பரை முஸ்லிம்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அந்நாளிதழிடத்தில் பரம்பரை முஸ்லிம் அமைப்பு கருத்துத்துத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.