காணி விவகாரம் : முசளியில் குட்டி அதிகாரிகளிடம் வாக்கு மூலம் அளித்தார் அமைச்சர் ரிஷாத்

· · 223 Views

மன்னார் – முஸலி பிரதேச செயலகப் பிரிவில் காடுகளை அழித்து மக்களை மீள்குடியேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.

 

 

முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.டி.ஏ.பொரலெஸ்ஸவின் தலைமையிலான நால்வர் அடங்கிய இந்தக் குழுவினர், முஸலி பிரதேச செயலக அலுவலகத்தில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

முஸலி பகுதி மக்களை மீள்குடியேற்ற வில்பத்து வனப் பகுதிக்கு உட்பட்ட காணிகள் பயன்படுத்தப்படுவதாக, ரிஷாட் பதியூதினுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.