காணாமல் போன பாஸ்போர்ட்டுக்களுக்கு 100/= மட்டும் அறவிட அமைஹ்ச்சரவை அங்கீகாரம் – நிபந்தனைகள் உண்டு

· · 219 Views

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுகள் காணாமல் போனால் அவற்றை மீள பெற்றுக் கொள்வதற்கு 10,000 ரூபாவுக்கு பதிலாக 100 ரூபாவை மட்டும் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

2017 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் காணாமல் போன கடவுச்சீட்டுகளை புதிதாக பெற்றுக் கொள்ள ரூபா 10,000 அறவிடப்படுவதிலிருந்து விலக்களிக்க தீரமானிக்கப்பட்டுள்ளது.

 

 

அத்துடன் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதியின் பின் கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொண்ட நபராக இருப்பின், அது தொடர்பில் அப் பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில் 100 ரூபா கட்டணத்தை மட்டும் அறவிட்டுக்கு கொண்டு பதிய கடவுச்சீட்டொன்றை விநியோகிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இச்சலுகையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் (2017-08.30) 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.