காணாமல் போகும் அதாவுல்லா கட்சி : 15 தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் S.L.M.C. யில் தஞ்சம் – கிழக்கு Bulty பாரம்பரியம்

· · 363 Views

-பைஷல் இஸ்மாயில்

 

தேசிய காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்கள் உட்பட 15 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை (24)  இரவு இணைந்துகொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் இணைப்பாளரும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான  எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தலைமையிலான குழுவினர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் மு.கா.வின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீரை  அட்டாளைச்சேனைக் காரியாலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் பின்னரே இவர்கள் மு.கா.வில் இணைந்துகொண்டுள்ளனர்.

article_1453694504-2

தேசிய காங்கிரஸ் கட்சிக்காகவும் அதன் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்காகவும் கடந்த சில வருடங்களாக இறக்கமாம் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சிப் பணியை முன்னெடுத்த மிக முக்கிய உறுப்பினர்களான எம்.ஏ.எம்.பஜீர், ரீ.எல்.நிகார்டீன், எஸ்.றபியுடீன், ஏ.அமீன், எம்.மஹ்சுக், எம்.எம்.பாறூக், எம்.ஆரீப், பௌருடீன் உள்ளிட்டோரே மு.கா.வில் இணைந்துகொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published.