கல்முனை மாநகர சபை மு.கா. வசம் !! தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாக A.C.M.C. கடும் ஆத்திரத்தில் – சப்பென்று முடிந்த படம்

· · 613 Views
-ரிபான்-

இன்று பிற்பகல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போதே பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் கைககளில் உள்ள வாக்கு எனும் ஆயுதம் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதுகில் குத்தியுள்ளார்.

 

இன்று காலை முதல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போது முஸ்லிம்கள் மேயராகவும், பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக ஹரீஸ் அமைச்சர் றிசாட்டுடன் நிந்தவூர் தோம்புக் கண்டம் ஹோட்டல் மற்றும் அமைச்சர் றிசாட்டின் மாமாவின் (நிந்தவூர் பசீல்) வீட்டிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது என்ன உடன்பாடு காணப்பட்டது என்பது வெளியாகவில்லை. இப்பேச்சுவார்த்தைகளின் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம்.அனிசீல் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பி;டத்தக்கது.

 

இதே வேளை, நேற்று இரவு கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் அஸாத்சாலி தோம்புக்கண்டம் ஹோட்டலில் சாய்ந்தமருது தோடம்பழக் குழுவினருடன் பேசினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை மேயராகக்குவதற்குரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது சண்டைகளும், சர்ச்;சைகளும் ஏற்பட்டன. இறுதியில் முடிவுகள் காணப்படவில்லை. இதே வேளை, இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும், தோடம்பழத்தில் வெற்றியீட்டிய 09 சுயேட்சைக் குழு உறுப்பினர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். இதன்படி இன்றைய அமர்விற்கு தாங்கள் சமூகமளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் இன்று 2.30மணிக்கு கல்முனை மாநகர சபைக்குரிய மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் இடம்பெற்றன. இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்புக்கு வாக்களித்தார்கள். றக்கீப் 22 வாக்குகளைக் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்;ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஹென்றி மகேந்திரனுக்கு 07 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

பிரதி மேயர் தெரிவுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.முபீத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கே.சிவலிங்கம், தமிழர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஸ் ஆகியோர்கள் போட்டியிட்டார்கள். இவர்களில் காத்தமுத்துக் கணேஸிற்கு முஸ்லிம் காங்கிரஸின் 12 உறுப்பினர்கள் உட்பட 15 வாக்குகளைக் பெற்றுக் கொண்டார். கே.சிவலிங்கம் 07 வாக்குகளையும், முபீத் 07 வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமூக நோக்குடன் செயற்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும், பிரதி அமைச்சர் ஹரீஸும் அவ்வாறு செயற்படவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி மேயராக தெரிவு செய்யப்படக் கூடாதென்ற போட்டி அரசியலை மாத்திரம் மனதிற் கொண்டு செயற்பட்டுள்ளார்கள்.

 இத்தெரிவுகள் நடைபெற்ற போது பிரதி அமைச்சர் ஹரீஸ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் நபீல் உட்பட்டோர் சமூகமளித்து இருந்தார்கள்.

கல்முனை முஸ்லிம்களிடம் இருந்து பறிபோகப் போகின்றது என்று தொண்டை கிழிய மேடைகளில் கத்திய ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு சொல்லி வைத்தது போன்று காத்தமுத்து கணேஸிற்கு வாக்களிக்க வைத்துள்ளார்.

கல்முனையின் துரோகி யார் என்பதனை கல்முனை முஸ்லிம்கள் முடிவு செய்ய வேண்டும். கல்முனை பறி போகப் போகின்றதென்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் இன்று கல்முனையின் துரோகி யார் என்பதனை அடையாளப்படுத்தியுள்ளார்.

கல்முனைக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எல்லைப் பிரச்சினை முக்கியமானது. இனிவரும் காலங்களில் கொடியேற்றப் பள்ளிவாசல் வீதியிலிருந்து பிரித்துக் கொடுக்க வேண்டியேற்படும். கல்முனைக்கு பல துரோகங்களைச் செய்துள்ள ஹரீஸின் துரோகங்களில் இது மிகப் பெரியதாகும்.

இதனைக் கூட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சாணக்கியத்தின் வெற்றி என்பார்கள். கல்முனை மாநகர சபையினை காப்பாற்றி விட்டதாகவும் கொக்கரிப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published.