கல்பிட்டி சேர்மன் ரேஸ் : ஆஷிக், சலாஹுடீன், அக்மல், தாரிக் கடும் முயற்சியில் !! திகழி சலாஹுதீன் ஹாஜியார் சேர்மன்..?

· · 1517 Views

நடைப் பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  கல்பிட்டி பிரதேஷ சபைக்கு  ஐக்கியத் தேசியக் கட்சி சார்ப்பில்  போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களுக்கிடையில் சேர்மன் பதவிக்கான கடுமையான போட்டி நிலை  ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி ஐக்கியத் தேசியக் கட்சி  வட்டார செய்தி வழங்குனர் ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.

 

இம்முறைத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி  கல்பிட்டி பிரதேஷ சபையில் 11 ஆசனங்களைப் பெற்று வெற்றி ஈட்டிய நிலையிலேயே இந்த கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

இம்முறைத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்துப் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் வெற்றி ஈட்டியும் மூவர் தோற்றுப்போன நிலையிலும்  அக்கட்சியின் தலைமையானது  தனது பிரதான வேட்பாளரான ஆஷிக்கை  எந்த விலைக் கொடுத்தாவது கல்பிட்டி பிரதேஷ சபையின் தலைவராக்குவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் கல்பிட்டி ஐக்கியத் தேசியக் கட்சி வட்டாரங்களில் கடுமையான ஆட்செட்பக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

 

 

இது சம்பந்தாமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் மட்ட பிரதானி ஒருவருடன் பேசியபோது,

 

 

” எமது கட்சி வடக்கு – கிழக்குக்கு வெளியில் ஒரே ஒரு பிரதேஷ சபையையும், ஒரு நகர சபையையுமே ஐக்கியத் தேசியக் கட்சியிடம் கேட்டிருந்தது, இதில் புத்தளம் நகர சபையும், கல்பிட்டி பிரதேச சபையும் அடங்குகின்றன. எமக்கு பெரும்பாலும் புத்தளம் நகர சபையில் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

 

 

இதனைப் போலவே நாம் ஏலவே ஐக்கியத் தேசியக் கட்சியிடம் வேண்டிக் கொண்டதன் பிரகாரம் கல்பிட்டி பிரதேசபையின் ஆட்சியையும்  சக ஐக்கியத் தேசிய கட்சி உறுப்பினர்களோடு இணைந்து பெற்றுக் கொள்ள வேண்டிய முயற்சிகளை எடுத்துள்ளோம் என அவர் கூறினார்.

 

 

இந்த குழப்பகரமான நிலைமைப் பற்றி  முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவரும் ஐக்கியத் தேசியக் கட்சியின் கல்பிட்டி அமைப்பாளருமான எம்.என்.எம். நஸ்மியிடம் வினவியபோது :

 

 

” கல்பிட்டி பிரதேசபையின் வெற்றி முழுக்க முழுக்க ஐக்கியத் தேசியக் கட்சியின் வெற்றி.எனவே கல்பிட்டி பிரதேஷ சபையில் ஆட்சியமைக்கும் உரிமை எனது கட்சிக்கும், எனது கட்சியின் உறுப்பினர்களுக்குமே   உள்ளது. இதில் கூட்டணிக்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. எங்களுடன் சேர்ந்து போட்டியிட்ட  அக்கட்சியின் ஆறு போட்டியாளர்களில் மூவர் மாத்திரமே வென்றுள்ளார்கள். மிகுதி அனைத்தும்  எனது கட்சிக்கு உரித்தான வெற்றியாகும்.

 

 

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்பிட்டியில் ஆட்சியுரிமைக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில் நான் கண்டிப்பாக அனுமதிக்கவும் மாட்டேன் எனக் கூறினார்.

 

 

கல்பிட்டி  தலைவர் பதவிக்கு உங்களின் தெரிவு யாராக இருக்கும் என்று வினவியபோது ,

 

 

கல்பிட்டி பிரதேசத்தில்  தாஹிரின் வேட்பாளருடன்  போட்டிட்டு  கூடிய  வாக்குகளைப் பெற்ற திகலி சலாஹுடீன் ஹாஜியார், இரண்டாவது  கூடுதல் வாக்குகளைப் பெற்ற கல்பிட்டியின்  அக்மல்  மரைக்கார், மற்றும் தாரிக்  ஆகியோரின் பெயர்களை எனது கட்சியின் தலைப் பீடத்திடம்  கொடுத்துள்ளேன். நான்  யாருக்காகவும் சிபாரிசுகளை செய்யவில்லை. யார் தகுதியானவர் என்பதனை கட்சி பரீசீலித்து  தகுதியானவரை  தலைவராக  தெரிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார். “மீண்டும் கூறுகிறேன் யார் என்ன சொன்னாலும் கல்பிட்டியின் பிரதேச சபை தலைவர் பதவி ஐக்கியத் தேசியக் கட்சிக்கார் ஒருவருக்குத்தான். இதில் எந்த மாற்றமுமில்லை என்றும் அவர் கூறினார்.

 

 

இதே வேளை, ஐக்கியத் தேசியக் கட்சி உயர் பீடத் தகவல்களின் படி , அக்கட்சி பெரும்பாலும் திகளியை சேர்ந்த சலாஹுடீன் ஹாஜியாரை  தலைவராக்கும் எண்ணத்தில் உள்ளதாக அறிந்துக் கொள்ள முடிகிறது.

 

  • மிபவ்

 

 

2 comments

Leave a Reply

Your email address will not be published.