கல்பிட்டி அமைப்பாளர் நஸ்மியின் பிழையான அணுகுமுறையே இன்றைய தோல்விக்குக் காரணம்..!! A.C.M.C. யின் எஹியா கூறுகிறார்

· · 1521 Views

இன்று நடந்த கல்பிட்டி பிரதேச சபைத தலைவர் தெரிவில் எமது ஐக்கியத் தேசியக்  கட்சிக்  கூட்டணி  பின்னடந்ததற்கு அமைப்பாளர் நஸ்மியின் தவறான அணுகுமுறைகளே காரணம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

 

 

அவர் ஆரம்பத்தில் இருந்தே தனது கட்சிக்குள் பிரித்தாளும் முறையைக் கையாண்டார். அவர் உறுதியாக ஒருவரை நகர சபைத் தலைவராக முன்னிலைப்படுத்தவில்லை.

 

 

 

 

மேலும், ஜனாப் .நஸ்மி கல்பிட்டியின் பிரதேச சபையின் தலைவராக்குவேன் என அவரின் கட்சியின் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் எமது கட்சிக்குள் வேண்டாத பிரச்சனைகள் தோற்றம் பெற்றன.

 

 

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இதனை நம்பி நம்மில்  ஒருவரை பிரேரிக்காமல் தமக்குள்ளே பிரிந்து நின்று தலைவராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் வெறுமனே காலமும் பகைகளும் மேலோங்கியதே தவிர எமது கட்சி ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து விட்டது.இவ்வாறு ஜனாப். ஆப்தீன் எஹியா குறிப்பிட்டார்.

 

ஜனாப் எஹியா மேலும் கூறுகையில் ;

 

ஆனால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதில் மிக நேர்மையாகவும் விட்டுக் கொடுப்புடனும் செயல்பட்டது. எமது கட்சியின் சார்ப்பில் போட்டியிட்டு வென்ற சகோதரர் ஆஷிக்கை தலைவராக நியமிக்கும்படி  பிரதமர் கடிதம் தந்திருந்தும்  கூட நாம் விட்டுக் கொடுப்புடனேயே செயல்பட்டோம்.

 

 

 

ஐக்கியத் தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான சலாஹுதீன் ஹாஜியார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாம் அவரையே தலைவராக முயற்சிக்கும் படி கூறி இன்று அவருக்கு எமது வாக்குகளையும் அளித்தோம். நாம் எவ்வாறு விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டோம்  என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.இது எமது அரசியல் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.

 

 

 

என்றாலும் கூட  எதிரணியினர் ஒன்றிணைந்து ஆட்சியமைத்து விட்டனர்.இதுவே அவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த பரிசாகும்.நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றும் , எங்களுக்குள்ளேயே போராடியதால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று ஜனாப். ஆப்தீன் எஹியா கவலையுடன் கூறினார்.

 

 

 

தற்போது கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் இன்பாசுக்கு எஹியா தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

 

எஹியாவின் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக கேட்பதற்கு ஐக்கியத் தேசியக் கட்சியின் கல்பிட்டி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியை தொடர்பு கொண்ட போதிலும் அவரின் தொலைப்பேசி காலையில் இருந்து இயங்கவில்லை.

 

  • மிபவ்

Leave a Reply

Your email address will not be published.